திருெவண்ணைநல்லூர் அருகே பாம்பு கடித்து சிறுமி பலி

பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள்.இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருெவண்ணைநல்லூர் அருகே பாம்பு கடித்து சிறுமி பலி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சாராய மேடு கிராமத்ைத சேர்ந்தவர் அரவிந்த். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியா (5). இவள் அதே பகுதியில் உள்ள ஊட்டச்சத்து மையத்தில் படித்து வந்தாள். பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள். அதிகாலையில் அவளை பாம்பு கடித்தது. கன்னத்தில் கடித்ததால் சிறுமி கதறினாள்.சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தனர். அப்போது சிறுமியை கடித்த பாம்பு அங்கு மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு சத்தம் போட்டனர்.

இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணிக்கு இறந்தாள். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com