search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "contracting"

    • இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் தமிழ்நாடு மாநில எல்லையையும், புதுச்சேரி மாநில எல்லையையும் இணைக்கும் மற்றொரு முக்கிய சாலையாக திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை - காசிப்பாளையம் - பூத்துறை - மேட்டுப்பாளையம் மற்றும் பூத்துறை - பெரம்பை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஊசுட்டேரி சுற்றுலாத்தளம், பறவைகள் சாரணாலயம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருவதால், போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது.

    இந்த சாலையை அகலப்படுத்தவும், பழைய பாலங்களை புதுப்பித்து புதிய பாலங்களை கட்டித்தரவேண்டுமென பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் நீண்டகால கோரிக்கையாக வைத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியினை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, திருச்சிற்ற ம்பலம்-காசிப்பாளையம் வரை உள்ள 3 கீ.மீ. நீள சாலையினை 3 மீட்டரிலிருந்து 5 மீட்டராக அகலப்படுத்தவும், பழைய பாலங்களை மேம்பாடு செய்வதற்கும், ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், காசிப்பாளையம் முதல் பூத்துறை வரை உள்ள 2 கீ.மீ. சாலை ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மேற்காணும் 5 கீ.மீ. நீள சாலை, நெடுஞ்சாலை த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பூத்துறை-மேட்டு ப்பாளையம் சாலையானது (2.95 கீ.மீ. நீளம்) 1.69 கோடி மதிப்பீட்டிலும், பூத்துறை-பெரம்பை சாலையானது (1.35 கீ.மீ. நீளம்) ரூ.72.85 லட்சம் மதிப்பீட்டிலும், சாலை மேம்பாட்டு பணிக ளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி யுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் பழனி,திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை முதல் பூத்துறை வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகள், பாலம் அமைக்கும் பணிகள் ஆகியவைகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ×