என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வளவனூர் கே.எம்.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 68), இவரது மனைவி உமாதேவி (61). இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் மகன், மகள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ராஜன், உமாதேவி தம்பதியினர் நேற்று மாலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவி ல்லை. இவர்களை தேடி அக்கம்ப க்கத்தினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது ராஜன், உமாதேவி ஆகியோர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்களின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதில் இவர்களுக்கு சொந்தமான நகைகள், பணம் அனைத்தும் வங்கி லாக்கரிலும், கணக்கிலும் உள்ளது தெரியவந்தது.

    மேலும், குடும்ப செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அதேநேரத்தில் இவர்களது வீட்டில் வாடகைக்கு இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியிடமிருந்து ரூ.21 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தம்பதி யினர் தாங்களாகவே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என மருத்துவர்கள் போலீ சாரிடம் கூறி யுள்ளனர். அதே நேரத்தில் பிரேத பரி சோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாக கூற முடியுமெனவும் மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த ராஜன், உமாதேவி தம்பதியினரை பணத்திற்காக யாரேனும் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பகையால் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற மற்றொரு கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேரை கொலை செய்து தூக்கில் தொங்க விட ஒருவரால் மட்டும் முடியாது. எனவே, 3 அல்லது 4 நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று கணித்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், செல்போன் சிக்னல்கள் போன்றவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அப்போது தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த கவுதம், கோபியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தார்.
    • உயிருக்க ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் கவுதம் (வயது 25). வெல்டிங் பணி செய்து வருகிறார். இவர் மொரட்டாண்டியில் வசிக்கும் சசிகலாவின் மகளான சுவேதாவை திருமணம் செய்து கொண்டார். இவர் மொரட்டாண்டியில் வீடு வாடகை எடுத்து தனியாக வசித்து வந்தார். சுவேதாவின் தந்தை மணி இறந்து போனதால் சசிகலா தனியாக வசித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் கோபி (22). இவருக்கும் சசிகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சசிகலாவின் வீட்டிற்கு கோபி அடிக்கடி வந்து சென்றுள்ளார். இருவரும் அடிக்கடியே தனியே சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இத்தகவல் அறிந்த கவுதம், தனது மாமியாரான சசிகலாவை கண்டித்துள்ளார். அதேபோல கோபியையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத, சசிகலாவும், கோபியும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி வந்தனர். நேற்று மதியமும் இருவரும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபி வீட்டிற்கு சென்றார். கோபியை அழைத்து மீண்டும் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்த கவுதம், கோபியின் நடு மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டையில் பிளவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கோபி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு கவுதம் அங்கிருந்து தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் கோபியை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் 30 தையல் போடப்பட்டு உயிருக்க ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனை அறிந்த கவுதம், புதுவை மாநிலம், ஜிப்மரில் உள்ள தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். நடந்த சம்பவத்தை கூறி சுத்தியலை ஓப்படைத்து போலீசாரிடம் சரணடைந்தார். இது குறித்து அவர்கள் வானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வானூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தன்வந்திரிநகர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். புதுவை போலீசார் அவர்களிடம் கவுதமை ஓப்படைத்தனர். அவரை வானூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மாமியாருடன் பழகி வந்த வாலிபரை ஜெயிலர் பட வில்லன் பாணியில் சுத்தியால் அடித்து கொலை செய்ய மருமகன் முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று அமைச்சர் பொன்முடி முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும் என பேசினார்.

    இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, தி.மு.க நகர செயலாளர் பூக்கடைகணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி துணைதலைவர் ஜோதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ், தலைமை கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுராமன் சிறுமதுரைசெல்வம் ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

     சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு விரைவு பஸ் சென்றுகொண்டிருந்தது.பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார். நேற்று இரவு விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது .

    இதில் பஸ்சின்முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இதில் பஸ் டிரைவர் வெங்கடாஜலபதி ,பயணிகள் மணிவேல் (31) , காமேஸ்வரி (36) திண்டுக்கல் திருஞான அருள், (63) சீர்காழி பாஸ்கர் (72) நந்தவனபட்டி காசிநாதன் (40) உள்பட 6 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சுங்கச்சா வடி விபத்து சேப்டி வேன் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் பட்டவர்களை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.

    • 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏமப்பூரில் பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் வாய்க்கால் வழியாக வந்து ஏரி நிரம்பியது. இதனால் தி.மழவராயனூர் கிராம விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் பொன்முடி, ஏமப்பூர் ஏரி நீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களை பார்வையிட்டு பின் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, நீர்வள த்துறை செயற்பொறியாளர் சோபனா மற்றும் அதிகாரி கள், விவசாயிகளிடம் ஆலோ சனை நடத்தினார். அதன் பிறகு விவசாய பயிர்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அப்போது அவருடன் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.புகழேந்தி, செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர், அய்யப்பன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், தி.மு.க.ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான விசுவநாதன், ஒன்றிய குழுதலைவர் ஓம்சிவ சக்திவேல், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநி பக்தவச்சலு, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிமோகன்ராஜ், தேவிசெந்தில், தி.மு.க.நகர செயலாளர் பூக்கடை கணேசன்,பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி, ஆவின் இயக்குனர் விஜயபா பு,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ்,மாவட்ட மருத்துவர் அணி அமை ப்பாளர் காவியவேந்தன், சிறுமதுரை செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.
    • மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்திற்கு மாவட்ட காஜி நியமனம் செய்யப்பட உள்ளது. காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய சட்ட சாத்திரத்தில் புலமை பெற்றவர்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவ னத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

    காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோ ர்கள் மேற்கண்ட தகுதியுடை வர்களாக இருப்பின் விண்ண ப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் 30.11.2023-க்குள் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், கூடுதல் விவரங்கள் தேவையெனில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
    • பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்:, அக்.18-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 தேதிகளில் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி சென்னையிலிருந்து அக்டோபர் 20-ம் தேதி 200 சிறபபுப் பஸ்கள், 21-ம் தேதி 250 சிறப்பு பஸ்கள், 22-ம் தேதி 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போன்று ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அக்டோபர் 24-ம் தேதி 200 சிறப்பு பஸ்களும், 25-ம் தேதி 150 சிறப்பு பஸ்களும், மேலும் பயணிகளின் தேவைக்கற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து சென்று விட்டனர்.
    • மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து சென்று விட்டனர். இத்தகவல் அறிந்த அக்கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் மரக்காணம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் தலைமையில் மரக்காணம் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் மண்டவாய், ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் இருந்த பா.ஜ.க. கொடிகளை மர்ம நபர்கள் அறுத்து சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசாரால் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
    • 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காகுப்பத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். முகாமில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் நோய்களிலிருந்து பாது காப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.தொடர்ந்து, கால்நடை வளர்ப்பிற்கான கடன் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, சிறந்த கறவைப் பசு பராமரிப்பு விவசாயி 3 நபர்களுக்கும், சிறந்த கிடேரி கன்று வளர்ப்பு விவசாயி 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குர் தலதா, துணை இயக்குநர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் மோகன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் .வேல்முருகன், கால்நடை உதவி மருத்துவர்கள் பாலாஜி, சிவா, சதானந்தன், சந்திரன், உஷாநந்தினி, கோவிந்தசாமி, சந்தியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர்.
    • சாக்கு மூட்டையில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே தெம்மார் ஆஞ்ச நேயர் கோவில் அருகே திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு மூட்டையில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து மினி லாரி டிரைவர் எரலூரை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பெரு மாள் கோவில் கருவறைக் குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு காப்பு காட்டில் விட்டனர். விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.கோவில் அர்ச்சகராக மாலோலன் பட்டாச்சாரியார் உள்ளார். இவர் நேற்று மாலை நடை திறக்க 6 மணியளவில் கோவில் கருவறை கதவை திறந்தார்.

    நில வாயிற்படி யின் மேல் நல்ல பாம்பு ஒன்று சத்தம் போட்டபடி பட மெடுத்து படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இது பற்றி விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேல்முருகன், ஆகியோர் கொண்ட குழுவி னர் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    • இவரது மனைவி சுகித்ரா அன்னம்புத்தூர் கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார்.
    • திண்டிவனம் டி.எஸ்.பி.அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கண்ணன் (வயது 47). இவர் நடுவனந்தல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சுகித்ரா அன்னம்புத்தூர் கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களது குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று விட்டு டியூசனுக்கு சென்று விட்டனர். தலைமை ஆசிரியர் கோபாலக்கண்ணன் காலை பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் இரவு 7.30 மணியளவில் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீடு உடைக்க பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே அறைக்கு சென்று பார்த்தபோது அவரது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 25 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரிய வந்தது

    .இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திண்டிவனம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் கைரேகை மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதி திண்டிவனம் டி.எஸ்.பி.அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகும். போலீசாரும் பொதுமக்களும் அதிகம் அளவில் நடமாடும் பகுதியில் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×