search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே  லாரி மீது அரசு பஸ் மோதல்: 6 பேர் காயம்- போக்குவரத்து பாதிப்பு
    X

    அரசு விரைவு பஸ் லாரியின் பின்புறம்மோதியதில் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

    விக்கிரவாண்டி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 6 பேர் காயம்- போக்குவரத்து பாதிப்பு

    • பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு விரைவு பஸ் சென்றுகொண்டிருந்தது.பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார். நேற்று இரவு விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது .

    இதில் பஸ்சின்முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இதில் பஸ் டிரைவர் வெங்கடாஜலபதி ,பயணிகள் மணிவேல் (31) , காமேஸ்வரி (36) திண்டுக்கல் திருஞான அருள், (63) சீர்காழி பாஸ்கர் (72) நந்தவனபட்டி காசிநாதன் (40) உள்பட 6 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சுங்கச்சா வடி விபத்து சேப்டி வேன் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் பட்டவர்களை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.

    Next Story
    ×