search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mysterious method"

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே வளவனூர் கே.எம்.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 68), இவரது மனைவி உமாதேவி (61). இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் மகன், மகள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். ராஜன், உமாதேவி தம்பதியினர் நேற்று மாலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவி ல்லை. இவர்களை தேடி அக்கம்ப க்கத்தினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது ராஜன், உமாதேவி ஆகியோர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்களின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதில் இவர்களுக்கு சொந்தமான நகைகள், பணம் அனைத்தும் வங்கி லாக்கரிலும், கணக்கிலும் உள்ளது தெரியவந்தது.

    மேலும், குடும்ப செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் வங்கியில் இருந்து எடுத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அதேநேரத்தில் இவர்களது வீட்டில் வாடகைக்கு இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த நபர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியிடமிருந்து ரூ.21 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனை திருப்பி அளிக்காத அந்த நபர் தலைமறைவாகியுள்ளார் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தம்பதி யினர் தாங்களாகவே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என மருத்துவர்கள் போலீ சாரிடம் கூறி யுள்ளனர். அதே நேரத்தில் பிரேத பரி சோதனை அறிக்கை வந்த பின்னரே உறுதியாக கூற முடியுமெனவும் மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த ராஜன், உமாதேவி தம்பதியினரை பணத்திற்காக யாரேனும் கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்ற கோணத்திலும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பகையால் கூட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற மற்றொரு கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பேரை கொலை செய்து தூக்கில் தொங்க விட ஒருவரால் மட்டும் முடியாது. எனவே, 3 அல்லது 4 நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று கணித்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், செல்போன் சிக்னல்கள் போன்றவைகளை ஆய்வு செய்து வருகின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு மர்மமான முறையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மர்மமான முறையில் மூதாட்டி இறந்து கிடந்தார்.
    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடியில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் அருகில் சித்தானங்கூர் தனியார் ஆன்மீக மையம் அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் ரங்கநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? யாரேனும் இவரை கொலை செய்து விட்டு இங்கே போட்டு விட்டு சென்றார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மர்மமான முறையில் கோழிகள் கொட்டப்படுகின்றன.
    • அப்பகுதி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே ஆவினங்குடி அருகாமையில் உள்ள வெள்ளாற்றில் குவியலாக இறந்து கிடைக்கும் பிராய்லர் கோழிகள். இந்த பிராய்லர் கோழிகளை மர்ம நபர்கள் வெள்ளாற்றில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் முகத்தில் துணியை வைத்து மூடிக்கொண்டு துர்நாற்றம் தாங்காமல் சென்று வருகின்றனர். ஒரே சமயத்தில் ஏராளமான கோழிகள் இறந்தது எப்படி அல்லது கோழிகள் நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய் காரணமாக என சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

    இதனால் அப்பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் கோழிகள் இழுத்துச் சென்று போடுவதால் தற்போது சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மர்மமான முறையில் கோழிகளை ஆற்றில் கொட்டி சென்றவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து கிடக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • கடலூர் அருகே கஞ்சா மூட்டைகள் கடலில் மிதந்து வந்தது.
    • கடலில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர், ஜூலை.29-

    கடலூர் துறைமுகம் அருகே தம்மனாம் பேட்டை கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் 2 மூட்டைகள் மிதந்து கரை ஒதுங்கியது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கடலூர் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மர்மமான முறையில் மிதந்து வந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர். அப்போது 2 மூட்டையிலும் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 மூட்டைகளிலும் சுமார் 50 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகள் இலங்கை பகுதியில் இருந்து வந்ததா? அல்லது தமிழகத்தில் கஞ்சா ஊடுருவலை போலீசார் கடுமையாக நெருக்கடி கொடுத்து தடுத்து வருவதால் கஞ்சா வியாபாரிகள் கடலில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலில் கஞ்சா மூட்டைகள் மிதந்து வந்ததால் கடலோர காவல் படை போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போதிய தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா மூட்டைகளை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×