search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cannabis covers"

    • கடலூர் அருகே கஞ்சா மூட்டைகள் கடலில் மிதந்து வந்தது.
    • கடலில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர், ஜூலை.29-

    கடலூர் துறைமுகம் அருகே தம்மனாம் பேட்டை கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் 2 மூட்டைகள் மிதந்து கரை ஒதுங்கியது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கடலூர் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மர்மமான முறையில் மிதந்து வந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தனர். அப்போது 2 மூட்டையிலும் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 மூட்டைகளிலும் சுமார் 50 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகள் இலங்கை பகுதியில் இருந்து வந்ததா? அல்லது தமிழகத்தில் கஞ்சா ஊடுருவலை போலீசார் கடுமையாக நெருக்கடி கொடுத்து தடுத்து வருவதால் கஞ்சா வியாபாரிகள் கடலில் வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடலில் கஞ்சா மூட்டைகள் மிதந்து வந்ததால் கடலோர காவல் படை போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போதிய தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா மூட்டைகளை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×