என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
    • பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம்:, அக்.18-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 தேதிகளில் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், ஆகிய ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலான சிறப்பு பஸ்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி சென்னையிலிருந்து அக்டோபர் 20-ம் தேதி 200 சிறபபுப் பஸ்கள், 21-ம் தேதி 250 சிறப்பு பஸ்கள், 22-ம் தேதி 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போன்று ஆயுத பூஜை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அக்டோபர் 24-ம் தேதி 200 சிறப்பு பஸ்களும், 25-ம் தேதி 150 சிறப்பு பஸ்களும், மேலும் பயணிகளின் தேவைக்கற்ப சிறப்பு பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து சென்று விட்டனர்.
    • மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகில் பா.ஜ.க. கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை மட்டும் மர்ம நபர்கள் நேற்று இரவு அறுத்து சென்று விட்டனர். இத்தகவல் அறிந்த அக்கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்பம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் மரக்காணம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் தலைமையில் மரக்காணம் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் மண்டவாய், ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் இருந்த பா.ஜ.க. கொடிகளை மர்ம நபர்கள் அறுத்து சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசாரால் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
    • 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காகுப்பத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். முகாமில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் நோய்களிலிருந்து பாது காப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.தொடர்ந்து, கால்நடை வளர்ப்பிற்கான கடன் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, சிறந்த கறவைப் பசு பராமரிப்பு விவசாயி 3 நபர்களுக்கும், சிறந்த கிடேரி கன்று வளர்ப்பு விவசாயி 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குர் தலதா, துணை இயக்குநர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் மோகன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் .வேல்முருகன், கால்நடை உதவி மருத்துவர்கள் பாலாஜி, சிவா, சதானந்தன், சந்திரன், உஷாநந்தினி, கோவிந்தசாமி, சந்தியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர்.
    • சாக்கு மூட்டையில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே தெம்மார் ஆஞ்ச நேயர் கோவில் அருகே திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு மூட்டையில் தென்பெண்ணையாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து மினி லாரி டிரைவர் எரலூரை சேர்ந்த விஜய் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பெரு மாள் கோவில் கருவறைக் குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு காப்பு காட்டில் விட்டனர். விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.கோவில் அர்ச்சகராக மாலோலன் பட்டாச்சாரியார் உள்ளார். இவர் நேற்று மாலை நடை திறக்க 6 மணியளவில் கோவில் கருவறை கதவை திறந்தார்.

    நில வாயிற்படி யின் மேல் நல்ல பாம்பு ஒன்று சத்தம் போட்டபடி பட மெடுத்து படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இது பற்றி விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேல்முருகன், ஆகியோர் கொண்ட குழுவி னர் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    • இவரது மனைவி சுகித்ரா அன்னம்புத்தூர் கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார்.
    • திண்டிவனம் டி.எஸ்.பி.அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கண்ணன் (வயது 47). இவர் நடுவனந்தல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சுகித்ரா அன்னம்புத்தூர் கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களது குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று விட்டு டியூசனுக்கு சென்று விட்டனர். தலைமை ஆசிரியர் கோபாலக்கண்ணன் காலை பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் இரவு 7.30 மணியளவில் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீடு உடைக்க பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே அறைக்கு சென்று பார்த்தபோது அவரது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 25 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரிய வந்தது

    .இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திண்டிவனம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் கைரேகை மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதி திண்டிவனம் டி.எஸ்.பி.அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகும். போலீசாரும் பொதுமக்களும் அதிகம் அளவில் நடமாடும் பகுதியில் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவா சைக்கு மறுநாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த ஓமந்தூரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 60). இவரது காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தோட்டத்திற்கு சென்ற நாராயணசாமி, அங்கிருந்த வேப்பமரத்தில் வேட்டி யால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் போலீசார், நாராயணசாமி உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
    • சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு தலைமையில் ரெட்ட ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பா ளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமை ச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது ,

     இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்து, வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். திருவ ண்ணாமலையில் நடைபெற இருக்கின்ற பாக முகவர்கள் மண்டல மாநாட்டிற்கு வருகின்ற 22 -ந்தேதி வருகை தரும் தி.மு.க. தலைவர், தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய இடங்களில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், மாசிலாமணி செந்தமி ழ்செல்வன்,தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் சேகர், ஒன்றிய செயலாள ர்கள் மணிமாறன், செழியன், அண்ணாதுரை, ராஜாராம், துரை, இளம்வழுதி, ஒன்றிய குழு தலைவர்கள் அமுதா ரவிகுமார், யோகேஸ்வரி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.சின்னசாமி ,பொதுக்குழு உறுப்பினர் வீடுர் ரவி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் நெலி சுப்பிரமணி, சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் தமிழ்நாடு மாநில எல்லையையும், புதுச்சேரி மாநில எல்லையையும் இணைக்கும் மற்றொரு முக்கிய சாலையாக திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை - காசிப்பாளையம் - பூத்துறை - மேட்டுப்பாளையம் மற்றும் பூத்துறை - பெரம்பை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஊசுட்டேரி சுற்றுலாத்தளம், பறவைகள் சாரணாலயம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருவதால், போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது.

    இந்த சாலையை அகலப்படுத்தவும், பழைய பாலங்களை புதுப்பித்து புதிய பாலங்களை கட்டித்தரவேண்டுமென பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் நீண்டகால கோரிக்கையாக வைத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியினை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, திருச்சிற்ற ம்பலம்-காசிப்பாளையம் வரை உள்ள 3 கீ.மீ. நீள சாலையினை 3 மீட்டரிலிருந்து 5 மீட்டராக அகலப்படுத்தவும், பழைய பாலங்களை மேம்பாடு செய்வதற்கும், ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், காசிப்பாளையம் முதல் பூத்துறை வரை உள்ள 2 கீ.மீ. சாலை ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மேற்காணும் 5 கீ.மீ. நீள சாலை, நெடுஞ்சாலை த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பூத்துறை-மேட்டு ப்பாளையம் சாலையானது (2.95 கீ.மீ. நீளம்) 1.69 கோடி மதிப்பீட்டிலும், பூத்துறை-பெரம்பை சாலையானது (1.35 கீ.மீ. நீளம்) ரூ.72.85 லட்சம் மதிப்பீட்டிலும், சாலை மேம்பாட்டு பணிக ளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி யுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் பழனி,திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை முதல் பூத்துறை வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகள், பாலம் அமைக்கும் பணிகள் ஆகியவைகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • ஜீனத் பி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்
    • தூக்க கலக்கத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வர் அப்பாஸ் அன்சாரி. இவரது மனைவி ஜீனத் பி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அப்பாஸ் அன்சாரி தனது மனைவி ஜீனத் பீ மற்றும் மகன் முகமது சூர்யா,மகள் பானு பேரகுழந்தை நூமான் ஆகிேயார் காரில் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

    காரை ஜாகிர் உசேன் ஓட்டி வந்தார். இந்த கார் அதிகாலை 4.30 மணி அள வில் ஆரோவில் அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் தூக்க கலக்கத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் அன்சாரி மனைவி ஜீனத் பீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 8 வயது பேரக் குழந்தை மகன், மகள் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சை க்காக ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து ஆரோ வில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • மூடப்படாத பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது.
    • நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதாள சாக்கடை பணியின் போது பல்வேறு இடங்களில் சரிவர மூடப்படாத பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து குடிநீர் குழாயும் அவ்வப்போது உடைந்து தண்ணீர் வீணாவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம் திடீரென உள் வாங்கி அதிலிருந்து குழாய் உடைந்து குடிநீரானது வீணாக ரோட்டில் ஆறு போல் ஓடியது. இது குறித்து நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பொது பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    ×