திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி

நாகராஜ் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 56). கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குள் ஓலக்கூர் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் இறந்து கிடந்த நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com