என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செஞ்சியில் உள்ள அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குனர் லதா திட்ட விளக்க உரையாற்றினார். மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப் பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றி னார்.

    நிகழ்ச்சியில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு துறை நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், உதவி இயக்குனர்கள் பாலமுருகன், நடராசன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார் வல்லம் அமுதா ரவிக்குமார் ,மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன் ,ஒலக்கூர் சொக்கலிங்கம் திண்டிவனம் நகராட்சி தலைவர் நிர்மலா ரவிச்சந்தி ரன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, அகிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் சையத் ரிஸ்வான், பேரூ ராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார்.
    • பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் மாவட்ட கலெக்டர் பழனி ஒரத்துார் ஊராட்சி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ 12லட்சத்து 31ஆயிரத்து 400 மதிப்பீட்டில் செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார். 

    வேம்பி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிட பணியையும், ஏரிக்கரையில் ரூ16.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய பொது கிணறையும், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் பணிகளையும் பார்வை யிட்டு பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி னார்.

    இந்த ஆய்வின்போதுகூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், செயற் பொறி யாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக் , ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன் உட்பட அரசு பணி யாளர்கள் உடனிருந்தனர்.

    • கடலூர் ,திருக்கோவிலூர் திருச்சி ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள்.
    • ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் 4 வழி சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து தான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, கடலூர் ,திருக்கோவிலூர் திருச்சி ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த லாரியின் முன் அச்சு கழன்று, டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்தை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் கோபி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்ப டுத்தும் பணியில் ஈடுபட்ட னர். சரியாக ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப் பகுதி யில் விழா காலங்களில் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் நியமிக்கப் பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    • மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது .
    • பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது . இது கிராமத்தையொட்டிய சாலை ஓரத்தில் உலகத்திலே மிகப் பரந்த அளவுக்கு குளம் அமைந்துள்ளது. தற்போது அந்த குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த குளத்தில் பாசி, செடி, கொடி ஆகாயத்தாமரை போன்ற வளர்ந்து இருப்பதால் துர்நாற்றம் வீசும் அளவுக்கு அந்த குளம் இருப்பதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பிரம்ம தேசம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்வது வழக்கம். பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் காலை மாலையில் சாராயம் விற்பனை அேமாகமாக நடைபெறுகிறது. குறைந்த விலைக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு வதால் விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது. இந்த சாரா யத்தை விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரம்மதேசம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை போலீசார் தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    • இதற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றது.
    • கலைச்செல்வி உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள் கட்டவும் கூனிமேடு ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 புதிய வகுப்பறைகள் உள்பட ரூ 2.80 கோடி மதிப்பில் 13 புதிய வகுப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் ,மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி,பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆள வந்தார், விழுப்புரம் மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவி சேரன்,மாவட்ட கவுன்சிலர் புஷ்பவல்லி குப்புராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயா பெருமாள், துர்கா கலைஞர், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கூனி மேடு ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி ஜெயராமன், கூனி மேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி, அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • விபத்து குறித்த தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 54), அயனாவரம் சக்திவேல் (51), திருவண்ணாமலை ஜீவா நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46) ஆகியோர் சென்னையில் இருந்து பழனிக்கு நேற்று நள்ளிரவு காரில் புறப்பட்டனர். இந்த காரை சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (45) ஓட்டிவந்தார்.

    இந்த கார் இன்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் இருந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சக்திவேல், கமலக்கண்ணன், ராஜசேகர் ஆகியோர் படுகாயமடைந்து காருக்குள்ளேயே கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது.
    • அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டில் இருந்து மரக்காணம் வழியாக ஓமீப்பேருக்கு தடம் எண் 61-ல் மகளிருக்கான இலவச பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் இன்று காலை 10 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கீழ்புத்துப்பட்டிலிருந்து புறப்பட்டது. இந்த பஸ் கிழக்கு கடற்கரை சாலையில் ஆலப்பாக்கம் அருகே காலை 10.30 மணியளவில் வந்த போது, சாலையில் சென்ற வாகனங்களை மோதுவது போல சென்றது. இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் அலறினர். இதையடுத்து பெண் பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெண் பயணிகள் பஸ்சினை சாலையோரத்தில் நிறுத்த சொல்லி டிரைவரிடம் வலியுறுத்தினர்.

    சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதுவதை போல பஸ்சினை ஓட்டிய டிரைவர், ஒரு வழியாக சமாளித்து நிறுத்தினார். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள், அலறியடித்து கீழே இறங்கினர். அப்போது கூனிமேட்டில் நடந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் பங்கேற்ற மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார், மரக்காணத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர். உடனடியாக சாலையோரத்தில் இருந்த பஸ்சிற்குள் போலீசார் சென்றனர். அங்கிருந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தியதில், டிரைவர் குடிபோதையில் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் புதுச்லைசேரி சாலையில் உள்ள ஆலமரம் நள்ளிரவில் விழுந்து 3 மின்கம்பம் உடைந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை பணியாளர்கள், பொதுப்பணி துறையினர், மரக்காணம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.

    • நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்வலையாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி(வயது45), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர்.

    விழுப்புரம்:

    ரெட்டணை அருகே உள்ள பெரமண்டூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் நாக முத்து (வயது60). நாரேறி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர்கள் இருவரும் விவ சாயிகள். இவர்கள் இரு வரும் தங்களுக்கு சொந்த மான நிலத்தில் விளைந்த மானிலா பயிறை விக்கிர வாண்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிர வாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.

    மினி லாரியை நாரேறிகுப் பத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். மினிலாரி பேரணி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரி மினி லாரியின் பின்னால் மோதியது. இதில் நிலை தடுமாறிய மினி லாரி இடது புற சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் மினி லாரி டிரைவர் லோக நாதன், விவசாயிகள் நாக முத்து, அஜித் ஆகியோர் காய மடைந்தனர். இவர்கள் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் சுங்கச்சாவடி விபத்து சேப்டி வேன் வர வழைத்து விபத்துக்குள் ளான வாகனத்தை மீட்டனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் சுகாதாரத் துறை சார்பில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது பற்றியும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிரசவங்கள், மக்களை தேடி மருத்துவச் சேவைகள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சேவைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசைகளோடு ஒப்பிட்டு கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    பொது மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் இதர துறைகளின் ஒத்துழை ப்பு குறித்தும் விவாதித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில்குமார், அரசு விழுப்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) கீதாஞ்சலி மருத்துவப் பணிகள் மற்றும் குடும்பநலத் துறை இணை இயக்குநர் லட்சுமணன், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவல ர்கள், சுகாதாரத்து றை அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை அலுவலர்கள், மற்றும் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×