என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • விபத்து குறித்த தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 54), அயனாவரம் சக்திவேல் (51), திருவண்ணாமலை ஜீவா நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46) ஆகியோர் சென்னையில் இருந்து பழனிக்கு நேற்று நள்ளிரவு காரில் புறப்பட்டனர். இந்த காரை சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (45) ஓட்டிவந்தார்.

    இந்த கார் இன்று அதிகாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டினை இழந்த கார், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் இருந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சக்திவேல், கமலக்கண்ணன், ராஜசேகர் ஆகியோர் படுகாயமடைந்து காருக்குள்ளேயே கிடந்தனர். அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் இறந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது.
    • அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டில் இருந்து மரக்காணம் வழியாக ஓமீப்பேருக்கு தடம் எண் 61-ல் மகளிருக்கான இலவச பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் இன்று காலை 10 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு கீழ்புத்துப்பட்டிலிருந்து புறப்பட்டது. இந்த பஸ் கிழக்கு கடற்கரை சாலையில் ஆலப்பாக்கம் அருகே காலை 10.30 மணியளவில் வந்த போது, சாலையில் சென்ற வாகனங்களை மோதுவது போல சென்றது. இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் அலறினர். இதையடுத்து பெண் பயணிகள் டிரைவரிடம் சென்று கேட்டபோது, அவர் குடிபோதையில் பஸ்சினை இயக்கியது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெண் பயணிகள் பஸ்சினை சாலையோரத்தில் நிறுத்த சொல்லி டிரைவரிடம் வலியுறுத்தினர்.

    சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதுவதை போல பஸ்சினை ஓட்டிய டிரைவர், ஒரு வழியாக சமாளித்து நிறுத்தினார். இதையடுத்து பஸ்சில் பயணம் செய்த பெண் பயணிகள், அலறியடித்து கீழே இறங்கினர். அப்போது கூனிமேட்டில் நடந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் பங்கேற்ற மரக்காணம் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார், மரக்காணத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அலறியடித்து ஓடிவந்த பெண்கள், நடந்தவைகளை போலீசாரிடம் கூறினர். உடனடியாக சாலையோரத்தில் இருந்த பஸ்சிற்குள் போலீசார் சென்றனர். அங்கிருந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தியதில், டிரைவர் குடிபோதையில் இருந்ததை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் புதுச்லைசேரி சாலையில் உள்ள ஆலமரம் நள்ளிரவில் விழுந்து 3 மின்கம்பம் உடைந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை பணியாளர்கள், பொதுப்பணி துறையினர், மரக்காணம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.

    • நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்வலையாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி(வயது45), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர்.

    விழுப்புரம்:

    ரெட்டணை அருகே உள்ள பெரமண்டூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் நாக முத்து (வயது60). நாரேறி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர்கள் இருவரும் விவ சாயிகள். இவர்கள் இரு வரும் தங்களுக்கு சொந்த மான நிலத்தில் விளைந்த மானிலா பயிறை விக்கிர வாண்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய ஒரு மினி லாரியின் மூலம் மணிலா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு விக்கிர வாண்டி நோக்கி சென்று கொண்டி ருந்தனர்.

    மினி லாரியை நாரேறிகுப் பத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். மினிலாரி பேரணி கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு கண்டெய்னர் லாரி மினி லாரியின் பின்னால் மோதியது. இதில் நிலை தடுமாறிய மினி லாரி இடது புற சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் மினி லாரி டிரைவர் லோக நாதன், விவசாயிகள் நாக முத்து, அஜித் ஆகியோர் காய மடைந்தனர். இவர்கள் உடனடியாக முண்டி யம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் சுங்கச்சாவடி விபத்து சேப்டி வேன் வர வழைத்து விபத்துக்குள் ளான வாகனத்தை மீட்டனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
    • முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் சுகாதாரத் துறை சார்பில் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது பற்றியும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கலெக்டர் பழனி அறிவுரை வழங்கினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிரசவங்கள், மக்களை தேடி மருத்துவச் சேவைகள் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை சேவைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசைகளோடு ஒப்பிட்டு கடந்த மாதத்தை விட நடப்பு மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னேற்றம் அடைந்ததை ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    பொது மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் இதர துறைகளின் ஒத்துழை ப்பு குறித்தும் விவாதித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில்குமார், அரசு விழுப்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) கீதாஞ்சலி மருத்துவப் பணிகள் மற்றும் குடும்பநலத் துறை இணை இயக்குநர் லட்சுமணன், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், முதன்மை மருத்துவ அலுவல ர்கள், சுகாதாரத்து றை அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை அலுவலர்கள், மற்றும் முண்டியம்பாக்கம் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இதனால் விவசாய பாசனமும், ஏரி பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
    • இதனால் அனைத்து கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் மலட்டாறில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலட்டாறில் வரக்கூடிய தண்ணீர் இருவேல்பட்டு, காரப்பட்டு, மேல்தணியாலம்பட்டு, டி.குமாரமங்கலம், சேமங்கலம், ரெட்டிகுப்பம், ஒறையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வழி தூர்ந்துபோய் உள்ளது. மணல் மேடாக உள்ளதால் மழைக்காலத்தில் ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் செல்ல தடை ஏற்படும்.

    இதனால் விவசாய பாசனமும், ஏரி பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனையறிந்த ஒன்றிய கவுன்சிலர் ஆடிட்டர் சுகந்தி ராஜீவ்காந்தி, ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் மேடுகளை அகற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வகையில் சரி செய்தார். இதனால் அனைத்து கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வருண பூஜை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தில் நடைபெறுவது வழக்கம்.
    • ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவாகி நீர்வரத்து தடைபட்டிருந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் மலட்டாறில் ஜீவநதி நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சி கூடல் சார்பில் மழை வேண்டி வருணபூஜை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருண பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்த அமைப்பின் தலைவர் எஸ். வி. எம் தட்சணாமூர்த்தி ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது. பூஜையில் வேதவிற்பன்னர்கள் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் வருணஜெபம் நடத்தி பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசநீரை ஆற்றில் ஊற்றி வருணபகவானை வழிபட்டனர். பின் பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

    1972 ம் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆங்காங்கே மணல் திட்டுக்கள் உருவாகி நீர்வரத்து தடை பட்டிருந்தது. 1991 ம் ஆண்டு ஜீவநதி அமைப்பின் மூலம் மலட்டாறு தூர்வாரப்பட்டு திருக்கோவிலூர் அணைக்கட்டு முதல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி கட்டமுத்து பாளையம் வரை தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 66 கிராம விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார்.
    • அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல் சிவிரி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்( வயது 33). இவர் திண்டிவனத்தில் உள்ள வேல்டிங் கடையில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாரில் உள்ள ராமதாசின் மாமியார் வீட்டில் தங்கி உள்ளனர். அவர்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக திண்டிவனத்தில் இருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் தெள்ளார் நோக்கி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஊரல் அருகே வரும்போது அதிவேகமாக வந்த தனியார் பஸ் ராமதாஸ் மீது மோதியது.இந்த விபத்தில் ராமதாஸ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமதாஸின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்சை பறிமுதல் செய்து வேலூர் பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் தினேஷ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆயுத பூஜை கொண்டாடச் சென்ற வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறுகையில் இந்த பகுதி மிகவும் குறுகிய சாலை பகுதியாகவும் இந்த பகுதியில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி,வேலூர், செல்லும் தனியார் பஸ்கள் அதிக ஒலி எழுப்பி அதி வேகமாக செல்வதே தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதாக தெரிவித்தனர்.எனவே டிரைவர்களுக்கு போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே போலீசார் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.
    • அவர்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட தனிபிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே போலீசார் திடீர் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

    மேற்படி அவர்கள் செஞ்சி வட்டம் கடகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 27), கவரை கிராமத்தைச் சேர்ந்த வரகுண பாண்டியன் மகன் தருண்குமார்(20) என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • நாகராஜ் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 56). கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குள் ஓலக்கூர் போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் இறந்து கிடந்த நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.கொளத்தூரை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 33). இவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் நிலத்திற்கு சென்றார். மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மீன்குட்டையை சுற்றிப்பார்த்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் (32) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார். வீட்டிற்கு வந்த நீலகண்டன் ராமராஜை தேடினார்.

    அவர் கிடைக்காததால், திரு வெண்ணைநல்லூர் போலீ சாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ராமராஜை தேடிப்பிடித்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து நீலகண்டனிடம் கொடுத்தனர். மேலும், ராமராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×