என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த 2 பேர் வெங்கடேசனை வழிமறித்து தாக்கினர்.இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்த வெங்க டேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விடாமல் துரத்திய மர்மநபர்கள், வெங்கடேசனை வழி மறித்து தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் கீழே விழுந்தார்.தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த நபர்கள் வெங்கடேன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் சாலை யில் சென்றவரை வழி மறித்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    • வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
    • திடீர் திடீரென மிதமானது முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மரக்காணம்:

    வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கோட்டக்குப்பம், வானூர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

    கடந்த காலங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் மரக்காணம் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை தண்ணீர் நிரம்பி விவசாயிகளுக்கு பயிரிட தேவையான தண்ணீர் கிடைக்கும். அதுபோல் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அதேசமயம் மரக்காணத்தில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட 25 ஆயிரம் டன் உப்பை பாதுகாப்பாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

    வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. திடீர் திடீரென மிதமானது முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    நாகராஜ் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை பாட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 32)டிரைவர். இவர் தனது உறவினருடன் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த திண்டிவனம் ரேசனைப் பகுதியை சேர்ந்த ராசு திடீரென நாகராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இதில் நாகராஜ் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் ேபரில் ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார்.
    • பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த ஆட்சிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 42). இவர் தனது காரில் மனைவி சூரியசந்திரகலா மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்றார். மீண்டும் திருப்பதியில் இருந்து திண்டிவனம் வந்தார். திண்டிவனம் புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிரே காரை நிறுத்தினார். காரிலேயே குழந்தையின் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை வைத்துவிட்டு ஓட்டலுக்குள் குடும்பத்துடன் சாப்பிட சென்றார்.

    சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து பார்த்த போது காரின் வலதுபுறம், பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரின் உள்ளே பார்த்த போது ஒரு பவுன் தங்க நகை, 10 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை காரின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து காரின் கண்ணாடியை உடைத்து நகை, பணம், செல்போனை திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பயணி ஒருவரி டம் மொபைல் போன் மற்றும் பையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார்.
    • போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து அனந்தபுரி ெரயில் கடந்த 17-ந் தேதி திண்டிவனம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பயணி ஒருவரி டம் மொபைல் போன் மற்றும் பையை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றார். அதே ெரயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகளி டம் கடந்த 19-ந் தேதி 28 பவுன் தங்க நகை, 3 செல்போ ன்கள் மற்றும் ரூ.3500 பறித்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் தப்பி சென்றார்.இது குறித்து திண்டிவனம் ெரயில்வே போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகன், மோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தேசி மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் திண்டி வனம் கிடங்கல் - 1 பகுதி யைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி அஜய், அதே பகுதியை சேர்ந்த செல்வ மணி ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 17 பவுன் தங்க நகை, செல்போன்கள், பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தர்பூசணி போன்ற பழவகை பயிர்களையும் பயிரிட தங்களது நிலத்தினை தயார் செய்து வருகின்றனர்.
    • இடு பொருட்களை வழங்கும்போது கண்டிப்பாக பட்டியலிட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    விழுப்புரம்:

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் நெல்நாற்று விடும் பணிகளைமுழு வீச்சில் தொடங்கியுள்ளனர். மானாவரி பகுதிகளில் உளுந்து, பச்சை பயிறு, பணப்பயிறு போன்ற பயறு வகை பயிர்களையும் எதிர்வரும் கார்த்திகைப்பட்டதில் மணிலா, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களையும் தர்பூசணி போன்ற பழவகை பயிர்களையும் பயிரிட தங்களது நிலத்தினை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் தலைமையில் நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டர் பழனி உத்தர வினை தொடர்ந்து விவசாயி களுக்கு தேவையான இடுபொருட் கள் தரமானதாகவும் சரியான விலையிலும் கிடைப்பதை உறுதி செய்திடும் பொருட்டு மரக்கா ணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலை மையில் மரக்காணம் வட்டா ரத்தில் உள்ள தனியார் இடுப்பொருள் விற்பனை நிலை யங்களை திடீர் ஆய்வு செய்தனர்.

    இதில் உரங்கள் இருப்பு குறித்தும் பாயிண்ட் ஆப் சேல் மெஷின் மூலம் யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவது குறித்தும்ஆய்வு செய்தனர்.குறிப்பாக தர்பூசணி பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள், குரோத் ரெகுலேட்டர் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள் குறித்து ஆய்வு செய்து ஜி2 படிவம் இல்லாத பொருட்களை பறி முதல் செய்தனர். மேலும் தரமான பொருட்களை அதற் கான நியாயமான விலையில் விவசாயி களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இடு பொருட்களை வழங்கும்போது கண்டிப்பாக பட்டியலிட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதேபோன்று உரிமத்தில் அங்கீகரிக்கப்பட்ட பூச்சி மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.ஆய்வின் போது வேளாண்மை அலு வலர் தேவி, துணை வேளா ண்மை அலுவலர் கதிரேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வின் போது அங்கு கூடியி ருந்த விவசாயி களுக்கு வட கிழக்கு பருவமழை குறைந்தால் மேற்கொள்ள வேண்டிய மாற்றுப் பயிர் திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. 

    • விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செஞ்சியில் உள்ள அல் ஹிலால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவல்லி, விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குனர் லதா திட்ட விளக்க உரையாற்றினார். மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப் பட்ட வர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கி சிறப்புரையாற்றி னார்.

    நிகழ்ச்சியில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு துறை நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், உதவி இயக்குனர்கள் பாலமுருகன், நடராசன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார் வல்லம் அமுதா ரவிக்குமார் ,மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன் ,ஒலக்கூர் சொக்கலிங்கம் திண்டிவனம் நகராட்சி தலைவர் நிர்மலா ரவிச்சந்தி ரன் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, அகிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் சையத் ரிஸ்வான், பேரூ ராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார்.
    • பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். விக்கிரவாண்டி ஒன்றி யத்தில் மாவட்ட கலெக்டர் பழனி ஒரத்துார் ஊராட்சி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ 12லட்சத்து 31ஆயிரத்து 400 மதிப்பீட்டில் செட்டி குளம் துார் வாரி, படித்துறை அமைத்திருக்கும் பணியை பார்வையிட்டார். 

    வேம்பி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிட பணியையும், ஏரிக்கரையில் ரூ16.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய பொது கிணறையும், அனை வருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் பணிகளையும் பார்வை யிட்டு பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி னார்.

    இந்த ஆய்வின்போதுகூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், செயற் பொறி யாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக் , ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன் உட்பட அரசு பணி யாளர்கள் உடனிருந்தனர்.

    • கடலூர் ,திருக்கோவிலூர் திருச்சி ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள்.
    • ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் 4 வழி சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து தான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, கடலூர் ,திருக்கோவிலூர் திருச்சி ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த லாரியின் முன் அச்சு கழன்று, டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்தை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் கோபி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்ப டுத்தும் பணியில் ஈடுபட்ட னர். சரியாக ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப் பகுதி யில் விழா காலங்களில் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் நியமிக்கப் பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

    • மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது .
    • பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கோன வாயகுப்பம் கிராமத்தின் பிரசிப்பெற்ற சப்தகன்னி அம்மன் கோவில் உள்ளது . இது கிராமத்தையொட்டிய சாலை ஓரத்தில் உலகத்திலே மிகப் பரந்த அளவுக்கு குளம் அமைந்துள்ளது. தற்போது அந்த குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த குளத்தில் பாசி, செடி, கொடி ஆகாயத்தாமரை போன்ற வளர்ந்து இருப்பதால் துர்நாற்றம் வீசும் அளவுக்கு அந்த குளம் இருப்பதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பிரம்ம தேசம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் வேலை செய்வது வழக்கம். பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் காலை மாலையில் சாராயம் விற்பனை அேமாகமாக நடைபெறுகிறது. குறைந்த விலைக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு வதால் விவசாயிகள் அதனை குடித்து விட்டு உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட் டோர் பலியான சம்பவம் நடைபெற்றது. இந்த சாரா யத்தை விற்பனை செய்த வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரம்மதேசம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை போலீசார் தடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் சமூக ஆர்வலர்க ளும் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    • இதற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றது.
    • கலைச்செல்வி உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள் கட்டவும் கூனிமேடு ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 புதிய வகுப்பறைகள் உள்பட ரூ 2.80 கோடி மதிப்பில் 13 புதிய வகுப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இரண்டு பள்ளி வளாகங்களிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் ,மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி,பேரூராட்சி மன்ற தலைவர் வேதநாயகி ஆள வந்தார், விழுப்புரம் மாவட்ட துணை சேர்மன் ஷீலா தேவி சேரன்,மாவட்ட கவுன்சிலர் புஷ்பவல்லி குப்புராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயா பெருமாள், துர்கா கலைஞர், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கூனி மேடு ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி ஜெயராமன், கூனி மேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி, அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×