லாரி மோதி டெய்லர் பலி

ரமேஷ் அதே ஊரில் தனியாக டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
லாரி மோதி டெய்லர் பலி
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் ரமேஷ் (42). இவர் அதே ஊரில் தனியாக டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக திருக்கனூர் சென்று விட்டு காப்பியம் புலியூர் செல்வதற்காக பனையபுரம் கூட்டுச்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிசென்ற லாரி இவர் மீது மோதியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

இந்த தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரமேஷின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com