என் மலர்
விழுப்புரம்
- அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
- அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அடுத்த பொய்ய பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் சர்வேசன்( வயது 34) அவரது மனைவி விஜயா தேவி, உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 7 பேர் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தினை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த போலீசில் பணியாற்றி வரும் போலீசார் இருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்து பாதை அமைத்து அவரது நிலத்திற்கு செல்வதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதை மீறி அவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தங்கள் நிலப்பயிர்களை அழித்து பாதையை பயன்படுத்தி வருவதாகவும் இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
- அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அப்புறப்படுத்திய விநாயகர் சிலையை திண்டிவனம் நகராட்சி விநாயகர் கோவிலில் துணி போட்டு மூடி பத்திரமாக வைத்துள்ளனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மகாத்மா காந்தி நகரில் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி பொது இடத்தில் விநாயகர் சிலையை கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து வணங்கி வந்தனர்.
இந்த சிலை வைத்ததற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற நகராட்சி நிர்வாகம் 3 முறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இது சம்பந்தமாக இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் விநாயகர் சிலையை அகற்றக்கூடாது என மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலையை சுற்றி கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவரை இடித்து விநாயகர் சிலையை கொட்டும் மழையில் அகற்றி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மீண்டும் அந்த பகுதியில் சிலை வைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என கூறி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சிலையை அகற்றுவதற்கு முன்னதாக ஐயரை வைத்து பூஜை செய்து சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்புறப்படுத்திய விநாயகர் சிலையை திண்டிவனம் நகராட்சி விநாயகர் கோவிலில் துணி போட்டு மூடி பத்திரமாக வைத்துள்ளனர்.
- சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 20-வது வார்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமை கிடைத்துள்ள தாகவும் ஆனால் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வில்லை என கூறி 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யா ராஜாவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர். அப்போது தாசில்தார் இல்லாததால் திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் டோமிஸ் சேவியரை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இதனை தரையில் வைத்து அதன்மீது இரும்பு தகடுகளை போட்டு கடந்த 3-ந் தேதி தளம் ஒட்டப்பட்டது.
- இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசாரிடம் புகாரளித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பகுதியில் கிருஸ்துவ மையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டடித்தில் தளம் ஒட்ட, இரும்பிலான ஜாக்கிகள் 350 வரவழைக்கப்பட்டது. இதனை தரையில் வைத்து அதன்மீது இரும்பு தகடுகளை போட்டு கடந்த 3-ந் தேதி தளம் ஒட்டப்பட்டது.
இந்நிலையில் கட்டிடத்தின் சூப்பர்வைசர் விஜயகுமார் நேற்று தளத்தை பார்வையிட வந்தார். அப்போது அவர் தளத்திற்கு முட்டுக் கொடுக்கப்பட்ட 90 ஜாக்கிகள் திருடப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரும்பு ஜாக்கிகளை திருடிச் சென்ற மர்மநபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (55) விவசாயி. சம்பவத்தன்று ரங்கநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு 3 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெணைநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இதில் பஸ்சிற் காக காத்திருக்கும் பயணி கள் அமர்வதற்காக இரும்பி லான சேர்கள் போடப்பட்டி ருந்தது.இந்த நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி, திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மணக்குப் பத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 22) என்பவர் பயணியர் நிழற்குடையில் இருந்த இரும்பு சேர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணக்குப் பத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரமேஷை கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல் ஏரிக்கரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாலா (வயது 31). இவர் மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இதுபோன்ற சமூக விரோதி செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சசாங்சாய் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஆணைக்கிணங்க பாலாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மாத்தூர் திருக்கை ரேஷன் கடையினை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறும் போது, தமிழ்நாடு முதல்- அமைச்சர் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசிய உணவு ப்பொ ருட்கள் தங்குதடை யின்றியும் தரமாக வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதனடிப்படையில், செஞ்சி வட்டம், மாத்தூர் திருக்கை ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோ கம் செய்யப்ப ட்டு வருவதை பார்வையி ட்டதுடன், இந்நியாய விலைக்கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை விவரம், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொரு ட்களின் விவரம் மற்றும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்து ம், அத்தியாவசியப் பொருட்க ளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நியாய விலைகடைக்கு வருகை தந்த குடும்ப அட்டைதாரர்களிடம் அத்தி யாவ சியப்பொரு ட்கள் முறை யாக கிடைக்கப்பெ றுகிறதா எனவும், தரமாக உள்ளதா எனவும், பொருட்களின் தரத்தில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடியாக மாற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இந்த ஆய்வின்போது, ரூ.13,975 மதிப்பிலான 55 கிலோ அரிசியும், ரூ.620 மதிப்பிலான 6 கிலோ துவரம்பருப்பும், ரூ.350 மதிப்பிலான 7 கிலோ சர்க்கரை கூடுதலாகவும், ரூ.21 மதிப்பிலான பாமா யில் 1 லிட்டர் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. எனவே, ரேஷன் கடை பணியாளருக்கு ரூ.14,875 அபராதம் விதிக்கப்பட்டு, துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபு ரியும் ரேஷன் கடை பணியா ளர்கள் மாற்றுப்பணி அல்லது துறை ரீதியாக பணிக்கு செல்லும் போது அறிவிப்பு பலகையில் கைப்பேசி எண் மற்றும் பணிக்கு செல்லும் விவரம் குறித்து எழுதி வைத்திட வேண்டும் என கலெக்டர் பழனிதெரிவித்தார்.ஆய்வின்போது, செஞ்சி வருவாய் தாசில்தார் ஏழுமலை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- பொதுமக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 10 -ந் தேதி மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நாறவாக்கம் மற்றும் கைப்பணி குப்பம் இடை யில் உள்ள கடற்கரை ஓரமுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தினை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஈஸ்ரூதன் ஜெய் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
அப்போது விழா மேடை எப்படி அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சருடன் வரும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய குடிநீர் உணவு இருக்கைகள் மின் வசதி போன்றவைகள் எவ்வாறு அமைத்து தர வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட கவுன்சிலர் புஷ்ப வல்லி குப்புராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு கம்பி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 48),ஆறுமுகம் (32),வெங்கடேசன் (35) மற்றொரு ஏழுமலை (35) ஆகியோர் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர் பைப்புகளை போதையில் திருடி விற்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்கானிப்பாளார் முகேஷ் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ் விசாரணை நடத்தி ஏழுமலை, மற்றொரு ஏழுமலை ஆகியோரை கைது செய்தார். ஆறுமுகம்,வெங்கடேசன் ஆகியோரை தேடி வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
- திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் சிவகாசி, குட்டி. இவர்கள் வேட்டைக்காக வெடிமருந்தை தங்களுடைய மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தனர். இந்த வண்டியை இன்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள ஒரு மளிகை கடையின் முன்பு நிறுத்தி இருந்தனர். திடீரென இதிலிருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மோட்டார் சைக்கிள் மற்றும் மளிகை கடையிலிருந்த கண்ணாடி, திண்பண்டங்கள் சேதமடைந்தன. மோட்டார் சைக்கிளில் அருகில் நின்றிருந்த குட்டி மற்றும் சிவகாசி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திடீரென மோட்டார் வைத்திருந்த வெடி மருந்து வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டிவனம்:
தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு, மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில், மத்திய நுண்ணறிவுப் பிரிவு விழுப்புரம் மண்டல உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா தலைமையில், தலைமை காவலர்கள் இளந்திரையன், கவிராஜா, மகாமார்க்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த செண்டூர் அருகில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 4128 மதுபாட்டில்களை (725 லிட்டர்) காரில் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேட்டைக்கு காரில் கடத்தி வருவதை அறிந்தனர். அந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது போலீசார் மீது மோதுவது போல் வந்த அந்த காரை மடக்கி பிடித்தனர். காரில் சோதனை செய்தனர். அதில் புதுவை மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. எஸ்கார்ட்போல் ஒருவர் இருசக்கர வாகனத்தில் காருக்கு முன்னே சென்றது தெரியவந்தது.
அந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் புதுவை மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்த கதிரவன் என்பதும் அவரது காரை ஓட்டி வந்தவர் வானூர் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும் தெரியவந்தது.
இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து சூனாம்பேடு பகுதியை சேர்ந்த ரகு என்பவருக்கு கொண்டு செல்லப்பட்டது என தெரிய வந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம், கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






