மேல்மலையனூரில் கல்லூரி மாணவி மாயம்

ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூரில் கல்லூரி மாணவி மாயம்
Published on

விழுப்புரம்:

மேல்மலையனூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.இவரது மகன் கார்த்திக். இவருடைய மகள் பிரியதர்ஷினி (18) மேல்மலையனூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 17-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து கார்த்திக் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதில் தொரப்பாடியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான தமிழரசன்(25) பிரியதர்ஷினியை கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com