பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட  மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

விழுப்புரம், அக்.21-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ ,மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற மற்ற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு கல்லுரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை யோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லுள்ள மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com