search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளத்தியில் சமுதாய வளைகாப்பு விழா  குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேண்டுகோள்
    X

    மேல்மலையனூர் அருகே வளத்தியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

    வளத்தியில் சமுதாய வளைகாப்பு விழா குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேண்டுகோள்

    • வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்
    • குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்மலையனூர் வட்டா ரத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வளத்தி யில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிழ்ச்சிக்கு மேல்மலை யனூர் ஒன்றிய குழு தலை வர் கண்மணி நெடுஞ்செழி யன் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயனா வரவேற்றார்.

    இவ்விழாவில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்க ளுக்கு சீர்வரிசை பொருட்க ளை வழங்கி சிறப்புரையாற்றி னார்.தொடர்ந்து வளத்தி ஆரம்ப சுகாதார நிலை யத்தின் சார்பில் ஊட்டச் சத்துடன் கூடிய தொகுப்பி னை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். முன்னதாக ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்கான கண்காட்சியினைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் விஜய லட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராம சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கள், சரவண குமார், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    Next Story
    ×