search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு இல்லாத அனைவருக்கும் கட்சி  பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும்:  அமைச்சர் பொன்முடி பேச்சு
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். 

    வீடு இல்லாத அனைவருக்கும் கட்சி பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேச்சு

    • ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்னசெவலை - தி. மழவராயனூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையினை ஏற்று அமைச்சர் பொன்முடி முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 72 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வீடு இல்லாத அனைவருக்கும் கட்சிப் பாகுபாடு இன்றி வீடு வழங்கப்படும் என பேசினார்.

    இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், ஒன்றிய குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, தி.மு.க நகர செயலாளர் பூக்கடைகணேசன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி துணைதலைவர் ஜோதி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கிருஷ்ணராஜ், தலைமை கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுராமன் சிறுமதுரைசெல்வம் ஊராட்சி மன்ற தலைவர் லதா ஏழுமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×