search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood Damages"

    • 20-க்கும் மேற்பட்ட பகுதிகளின் தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது.
    • கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகர 32-வது வார்டில் வசிக்கும் மக்கள் சார்பில் விழுப்புரம் கலெக்டருக்கு மனு அளித்தனர். அதில் உள்ளதாவது;- விழுப்புரம் நகராட்சி 32-வது வார்டிற்குட்பட்ட கவுதம் நகர், ஸ்ரீராம் நகர், வழுதரெட்டி காலனி, பாண்டியன் நகர், சாலாமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளின் தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த வாய்க்கால் தற்போது தூர்ந்து போய் இருப்பதால் வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு மேற்கண்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய சூழ்நிலை இருக்கிறது.

    கடந்த காலங்களில் பெய்த பருவமழையின் போது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் இன்ன ல்களுக்கு ஆளானார்கள். இது குறித்து கடந்த 2022ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. ஆகவே, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வடக்கிழக்கு பருவமழைக்கு முன்பாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால்களை தூர்வாரி வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×