search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணத்தில் 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது: ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
    X

     மரக்காணம் நகரான் தெருவில் கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

    மரக்காணத்தில் 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது: ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

    • இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
    • மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட நகரான் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது (45)இவர் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இவரது குழந்தைகளும் பள்ளிக்கு சென்று உள்ளனர் .இந்நிலையில் நேற்று மாலை இவரது வீடு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கூரை வீடு முழுக்க பரவி உள்ளது. இவரது வீட்டின் அருகில் உள்ள ராஜேந்திரன் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் 2 கூரை வீடுகளும் தீப்பற்றி முழுவதுமாக எரிந்துவிட்டது

    இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி, கட்டில், பாத்திரங்கள், நில பத்திரம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகிவிட்டது இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் வடக்கு மாவட்டதி.மு.க. துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் பேரூராட்சி துணை தலைவர் தலைவர் பலராமன், கவுன்சிலர்கள் தயாளன், பிரபாகரன் வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் முத்து கணேஷ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜனார்த்தனன் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தான் இந்த தீ விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 2குடும்பத்திற்கும்தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் அரிசி ,காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

    Next Story
    ×