search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம், வானூரில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த போலீசார்: பா.ம.க.வினர் வாக்குவாதம்
    X

    மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு திண்டிவனம் - மரக்காணம் சாலையில் குவிந்த பா.ம.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியபோது எடுத்தபடம்.

    திண்டிவனம், வானூரில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்த போலீசார்: பா.ம.க.வினர் வாக்குவாதம்

    • பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர்.
    • திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ம.க.வின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த இன்று திட்டமிடப்பட்டது. இதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார், மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அனுமதி கிடையாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர். இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    இதேபோல வானூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அக்கட்சியினர் கரசானூரில் ஒன்று திரண்டனர். அங்கு வந்த வானூர் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர். பா.ம.க. வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலான நிர்வாகிகள், எங்கள் கட்சியின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்கு திடீரென அனுமதி மறுப்பது சரியான நடைமுறையல்ல என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வினரின் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு திண்டிவனம் மற்றும் வானூரில் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், 2 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி போலீசாரிடம் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம், வானூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    Next Story
    ×