திருவெண்ணைநல்லூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது:ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல்

இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பது தெரியவந்தது.
திருவெண்ணைநல்லூரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது:ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல்
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருவெண்ணைநல்லூர் கடை வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை திருவெ ண்ணை நல்லூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடமிருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தையும், 300 லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவெண்ணை நல்லூர் காந்திக்குப்பம் வள்ளுவர் தெருவை சேர்ந்த வையாபுரி (வயது 65), உளுந்தூர்பேட்டை வட்டம் கொரட்டூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமரன் (42) என்பது தெரியவந்தது. 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com