விக்கிரவாண்டி அருகே கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் என்பவர் ஓட்டிச் சென்றார் . போலீசார் வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர்.
சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை படத்தில் காணலாம்.
சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை படத்தில் காணலாம்.
Published on

விழுப்புரம்:

ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் (வயது36) என்பவர் ஓட்டிச் சென்றார் . நேற்று இரவு 7.40 மணி அளவில் முண்டியம்பாக்கம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கரும்புகள் சாலை முழுவதும் சிதறியது.

இதனால் திருச்சி சென்னை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் -இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ் ,காத்தமுத்து மற்றும் போலீசார் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர். விக்கிரவாண்டி டோல் பிளாசா ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் லாரி மற்றும் கரும்புகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com