என் மலர்
விழுப்புரம்
- கோவிந்தன் மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார்
- வெடி மருந்தினை பசுமாடு கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கோவிந்தன்(55) இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார். வரும் வழியில் ஒரு கரும்பு தோட்டத்தில் கரும்புகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை ஒழிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடி மருந்தினை பசுமாடு கடித்தது கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது. பன்றிகளை கொல்ல வைத்த வெடியை மாடு கடித்த போது மாட்டின் வாய் சிதறி ரத்தம் கொட்டிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மரக்காணம் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து மரக்காணம் சுற்றுவட்டார பகுதியில் சாராயம், மது பானங்கள் விற்பவர்களை கைது செய்ய தனப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சாராயம் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட அருண்குமார் (வயது 26), அய்யப்பன் (32), மீனாட்சி (42), கலையரசி (39) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த சாராயம், மது பானங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.
- குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.
- பாரதியாரின் கவிதையை பிழையில்லாமல் கூறியவர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக தமிழில் பேசு தங்க காசு என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதில் 17-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.
அவருக்கு 4 கிராம் தங்க காசுகளை பரிசாக ராமதாஸ் வழங்கினார்.மேலும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் பாரதியாரின் கவிதையை பிழையில்லாமல் கூறியவர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கினார்.உடன் தலைமை நிலைய செயலாளராக இசக்கி படையாட்சி,பா.ம.க பொருளாளர் திலகபாமா, கவிஞர் ஜெயபாஸ்கரன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
- வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால் பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சாராயம், மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஏராளமானவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அதில் ஒரு சிலர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர்.
நாளொன்றுக்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரிப்பதால், போலீஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் வானூர், கோட்டக்குப்பம் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று மாலை மயக்கம் வந்தது. இதனையடுத்து பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று பினாயில் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முழுவதும் தெளித்தனர். மேலும், போலீஸ் நிலையத்தின் வெளியிலும் தெளித்தனர். அதன் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட போலீசார் தங்களின் பணிகளை தொடர்ந்தனர்.
- கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
- நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விக்கிரவாண்டி:
கள்ளச்சாராயம் குடித்த மேலும் 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13-ந் தேதி மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 60 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில்ஒரு பெண் உள்பட 14 பேர் பலியானார்கள். 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 34 பேர் பொது வார்டுகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் நேற்று முன்தினம் வரை 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் எக்கியார் குப்பம் பாலு, மரியதாஸ், விநாயகம், ராமு, மணிமாறன், தேசிங்கு, ராஜ துரை, சிவா, ஆறுமுகம் ஆகிய 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இவர்களை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், தனி தாசில்தார் இளங்கோவன், மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி, கண்காணிப்பாளர் அறிவழகன், உண்டு உறைவிட டாக்டர் ரவிக்குமார், துணை முதல்வர் யோகாம்பாள், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும், பொது வார்டில் 13 பேர் என 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- கள்ளச்சாராய விற்பனை முற்றலும் தடுக்கப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மண்டல் டி.ஐ.ஜி.யாக இருந்த பாண்டியன் பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மண்டல டி.ஐ.ஜியாக ஜியாவுல் ஹக் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத செயல்கள் குறித்து பொது மக்கள் தகவல் அளிக்கலாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும். தகவல் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லாட்டரி சீட்டு விற்பனை, சூதாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும். பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும் குறைகளை தெரிவிக்கலாம். ரவுடிகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனை முற்றலும் தடுக்கப்படும். புதுைவ மாநிலம் அருகில் விழுப்புரம் உள்ளதால் புதுவையில் இருந்து சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதை தடுக்க சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்க ப்பட்டு கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- பறவைகள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
- பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வானூர் வட்டம் உப்பு வேலூர் கிராமம் சிவன் கோயில் அருகே அதிகாலை நேரத்தில் பறவைகள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தபோது 3 வாலிபர்களால் 20 அரியவகை பறவை கள் மற்றும் 10 உள்நாட்டு பறவைகள் வேட்டையாடப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பறவைகளை வேட்டையாடிய 3 வாலிகர்களை பிடித்து வனசரக அலுவலகத்திற்கு வந்து அவர்களிடம் விசாரணை செய்ததில் புதுவை மாநிலத்தை சேர்ந்த கௌதம், சூர்யா, சரவணன், ஆகியோர் என்பதும் இவர்கள் அறிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரி யவந்தது. உடனே போலீசார் இவர்களை வானூர் நீதிமன்ற ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் வைத்திருந்த அரியவகை பறவைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 2 நாட்டுத் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்தனர்.
- விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார்.
- விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35) கட்டிட தொழிலாளி. இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பரனூர் பகுதி வழியாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலை ஓரத்தில் கிடந்த கல்லில் விழுந்த விஜயகுமார் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியானார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து அரகண்ட நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- முடிவு எடுப்பதற்காக 3 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் தொடர்பாக இரு தரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள்புகழேந்தி (விக்கிரவாண்டி) டாக்ட ர்லட்சுமணன்(விழுப்புரம்) சிவக்குமார்(மயிலம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-
கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா -திரவுபதி அம்மன் க்கவில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. எனவே, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. தற்போது மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னி லையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரிடமும் கருத்து க்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, பொது இடத்தினை பயன்படுத்திட அனைவருக்கும் உரிமை உண்டு, அதேப்போல் சமூக நீதி கடைப்பிடித்தும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதும் சட்ட விதிகளில் ஒன்றாகும்.
பொதுவான ஊர் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், இரு தரப்பினரும் தங்கள் பிரச்சனைகளை எவ்வாறு சுமூகமாக தீர்வு காணலாம் என அரசு வழிகாட்டுதலின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஊர் பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து சுமூக முடிவு எடுப்பதற்காக 3நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்.ஜெயசந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், திண்டிவனம் சப்-கலெக்டர் க ட்டா ரவி தேஜா, விழுப்பு ரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்ச ந்திரன், கூடுத ல்போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், ஸ்ரீதரன், மாவட்ட கலெக்டரின் நே ர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ், விழுப்புரம் தாசில்தார்வேல்முருகன், மேல்பாதி கிராமபொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளார் ஊராட்சியில், கிளை தி.மு.க. சார்பில் விளையாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டது.
- ஊராட்சி செயலர் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
மயிலம் அருகே கொள்ளார் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த அமைச்சர் மஸ்தான், கிரிக்கெட் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளார் ஊராட்சியில், கிளைதி.மு.க. சார்பில் விளை யாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டது.
விளை யாட்டு மைதானத்தை மயிலம் ஒன்றிய செயலா ளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான சேதுநாதன் மற்றும் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சேகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், ரிஸ்வான், கவுன்சிலர் உமா ஞானசேகர், வக்கீல் கமலக்கண்ணன், ஒன்றிய பிரதிநிதி தெய்வகண்ணன், ஊராட்சி செயலர் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பணிகளை ஏன் நிறுத்துகிறாய் என்று குமார், ரமேஷிடம் கேட்டனர்.
- இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அடுத்த கூனிமேட்டில் பழைமை வாய்ந்த பொன்னியம்மன் கோவில் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குலதெய்வமாக பொன்னியம்மன் உள்ளது. பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றிலும் மதிர்சுவர் அமைக்க கிராம மக்கள் முடிவெடுத்து பணிகளை தொடங்கினர். இந்நிலையில் கோவிலின் அருகில் குடியிருக்கும் குமார், ரமேஷ் ஆகியோர் மதில் சுவர் கட்டுமான பணிகளை தடுத்து, கட்டுமான பணி செய்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து தி.மு.க. பிரமுகர் பெருமாள் அங்கு விரைந்து வந்தார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பணிகளை ஏன் நிறுத்துகிறாய் என்று குமார், ரமேஷிடம் கேட்டனர். கோவிலுக்குள் சென்று வருவதற்கு 2 வழிகள் வைக்க வேண்டும். இல்லை என்றால் மதில் சுவர் கட்டவே கூடாது என்று கூறினார்கள். கோவிலின் பாதுகாப்பிற்காகவே மதில் சுவர் அமைக்கப்படுகிறது.
எனவே, ஒரு வழியே போதும் என்று பொதுமக்களும், தி.மு.க. பிரமுகர் பெருமாளும் அவர்களிடம் கூறினார்கள். இதில் சமாதானம் அடையாத குமார், ரமேஷ் ஆகிய 2 பேரும் தி.மு.க. பிரமுகர் பெருமாளை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். 2 வழி வைக்கவில்லை என்றால் மதில் சுவர் கட்டக்கூடாது. மீறி கட்டினால் உங்கள் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி, அங்கு பணி செய்த கட்டுமான ஊழியர்களை விரட்டினர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், தி.மு.க. பிரமுகர் பெருமாள் தலைமையில் மரக்காணம் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகாரளிக்க அனுமதி கேட்டனர். கள்ளச்சாராய வழக்கு விசாரணைக்கு அவர் சென்றுள்ளதாக பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து தி.மு.க. பிரமுகர் பெருமாள் மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு இங்கு வரவேண்டுமென கோஷம் எழுப்பினார். உடனடியாக அங்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தி.மு.க. பிரமுகர் பெருமாள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நாளை துணை போலீஸ் சூப்பிரண்டு கூனிமேட்டிற்கு வந்து நேரில் விசாரணை நடத்துவார் என்று கூறினார். இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். தி.மு.க. பிரமுகர் பெருமாள், கூனிமேடு கிராம மக்களுடன் சேந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்
- திண்டிவனம் மேம்பாலம் அருகே வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
விழுப்புரம்:
புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை கிளியனூர் அருகே எடையார்குளம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிள் பாதி வளியில் பழுதாகி நின்றது. அதனை சரி செய்ய மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஊழியரை அழைத்தார். இல்லையெனில் மோட்டார் சைக்கிளை சரிசெய்யும் பொருளை அந்த வாலிபர் கேட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ேவலைபார்க்கும் சிறுவன் கடை உரிமையாளர் இல்ைல அதனால் தரமுடியாது என்று கூறி கடையின் உள்ளே சென்றார். இந்நிலையில் அந்த வாலிபர் கடையின் வெளியில் சாவியுடன் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.
உடனே மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார் இதனால் அருகில் இருந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் சினிமா பாணியில் அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்று திண்டிவனம் மேம்பாலம் அருகே அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலம் சக்தி நகர் சாரம் பகுதியை சேர்ந்த கோவிந்த ராஜ் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் போலிசார் கோவிந்தராஜை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.






