தமிழில் பேசினால் தங்க காசு: பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வழங்கினார்

குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.பாரதியாரின் கவிதையை பிழையில்லாமல் கூறியவர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கினார்.
தமிழில் பேசினால் தங்க காசு பட்டிமன்றத்தில் வென்ற மாணவனுக்கு பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பரிசாக 4 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார்.
தமிழில் பேசினால் தங்க காசு பட்டிமன்றத்தில் வென்ற மாணவனுக்கு பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பரிசாக 4 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார்.
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக தமிழில் பேசு தங்க காசு என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதில் 17-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.

அவருக்கு 4 கிராம் தங்க காசுகளை பரிசாக ராமதாஸ் வழங்கினார்.மேலும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் பாரதியாரின் கவிதையை பிழையில்லாமல் கூறியவர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கினார்.உடன் தலைமை நிலைய செயலாளராக இசக்கி படையாட்சி,பா.ம.க பொருளாளர் திலகபாமா, கவிஞர் ஜெயபாஸ்கரன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com