என் மலர்tooltip icon

    வேலூர்

    விநாயகர் சதுர்த்தியையொட்டி பேனர் வைப்பதில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் படுகாயம் அடைந்தார்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அப்புன். இவரது மகன் குபேந்திரன் என்கிற வில்சன் (வயது 28). இவர் ராணிப்பேட்டை நாம் தமிழர் கட்சி நகர செயலாளராக உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி அம்மன் கோவில் தெரு அருகே பேனர் வைத்துள்ளார்.

    அதே தெருவை சேர்ந்தவர் வேளாங்கன்னி (28). இவர் புரட்சி பாரதம் கட்சியின் ராணிப்பேட்டை நகர செயலாளராக உள்ளார்.

    இவர் தனது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை பேனர் வைக்க தனது நண்பர்களான உதயகுமார் (27), சூர்யா (25), காளி (26), மகேஷ் (27), மனோஜ் (25), லோகேஷ் (25) ஆகியோருடன் வந்துள்ளார்.

    அப்போது குபேந்திரனுக்கும், வேளாங்கன்னிக்கும் இடையே பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டு ஓருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் குபேந்திரன் படுகாயம் அடைந்தார். இவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து குபேந்திரன் ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குபதிவு செய்து உதயகுமாரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பலியானார்.

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் விஜய் (வயது 27). இவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தார்.

    இவரும் இவரது நண்பர்களான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முத்தார குப்பம் பகுதியை சேர்ந்த பூஜித் (26), கோபி (21), வெங்கடபிரசாத் (25), சத்தியகுமார் (25), சுரேஷ் (22), சந்திரமவுலி (27) ஆகிய 7 பேர் பெங்களூரில் வேலைக்கு செல்வதற்காக நேற்றிரவு காரில் புறப்பட்டு சென்றனர். காரை விஜய் ஓட்டினார்.

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் மணல் ஏற்றி சென்ற மாட்டு வண்டி மீது மோதியது. இதில் காரில் சென்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த சேலூரை சேர்ந்தவர் தமிழரசன் (32). இவர் தனது குடும்பத்தினர் சந்திரகுமார், அபர்ணா, மகேஸ்வரி, மணி ஆகிய 5 பேருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    நேற்று சாமி தரிசனம் முடித்து காரில் சொந்த ஊருக்கு திரும்பினர். இன்று அதிகாலை 3 மணிக்கு இவர்கள் வந்த கார் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை தடுப்பில் மோதி விபத்துகுள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்பூர், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் சத்துவாச்சாரியில் பிரியாணி கடை உரிமையாளர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி எஸ்.கே.எம்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (வயது 60), காந்தி நகரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். மழை காரணமாக கடையில் மின்கசிவு இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை கடைக்கு வந்த அப்துல் ரஹீம் மின் விளக்கு சுவிட்ச்சை போட்டார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    அவரை மீட்டு சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

    சத்துவாச்சாரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. சிலைகளை கரைப்பதற்காக சதுப்பேரி ஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வேலூர் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் முக்கிய இடங்களில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடந்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சிறிய வடிவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இந்த நிலையில் வேலூர் நகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாளை (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

    இதற்காக பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாளை மதியம் சத்துவாச்சாரிக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து அவைகள் ஊர்வலமாக புறப்பட்டு சைதாப்பேட்டை பஜார், மண்டி வீதி வழியாக அண்ணா சாலைக்கு வந்து அதன் பின் சதுப்பேரி ஏரியை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக சதுப்பேரி ஏரியில் 30 அடி அகலத்தில், 15 அடி பள்ளம் ஏற்படுத்தப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டு வருகிறது.

    சிலைகளை கரைக்க தாமதமானால் வெளிச்சம் தேவை என்பதால் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளதோடு சிலைகளை தூக்க 2 கிரேன்களும் கொண்டு வரப்படுகின்றன.

    இந்த நிலையில் சிலைகளை கரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளத்தில் 3 மோட்டார்கள் மூலம் நேற்று தண்ணீர் நிரப்பப்படும் பணிகளை வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டார். மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன் உடனிருந்தார்.

    தொழிலதிபர் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையர்கள் 50 பவுன் நகைகள், பணத்தை திருடிச்சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் பாரூக் (வயது 50). வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள உறவினர். வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று காலை பாரூக்கின் வீட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இது குறித்து பாரூக்கிற்கு தகவல் கொடுத்தனர். பாரூக்கின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்ட அதிலிருந்து 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் திருடுபோனது தெரியவந்தது.

    கொள்ளையர்கள் சமைத்து சாப்பிட்ட உணவுப்பொருள்

    மேலும் சமையலறைக்கு சென்று கொள்ளை கும்பல் காய்கறிகளை நறுக்கி மக்ரூனி சமைத்து சாப்பிட்டு விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வெளியூர் செல்லவே அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    ஆம்பூர் அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் விஜய் (வயது 27). இவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தார்.

    இவரும் இவரது நண்பர்களான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முத்தாரகுப்பம் பகுதியை சேர்ந்த பூஜித் (26), கோபி (21), வெங்கடபிரசாத் (25), சத்தியகுமார் (25), சுரேஷ் (22), சந்திரமவுலி (27) ஆகிய 7 பேர் பெங்களூரில் வேலைக்கு செல்வதற்காக நேற்றிரவு காரில் புறப்பட்டு சென்றனர். காரை விஜய் ஓட்டினார்.

    சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் மணல் ஏற்றி சென்ற மாட்டு வண்டி மீது மோதியது. இதில் காரில் சென்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த சேலூரை சேர்ந்தவர் தமிழரசன் (32). இவர் தனது குடும்பத்தினர் சந்திரகுமார், அபர்ணா, மகேஸ்வரி, மணி ஆகிய 5 பேருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    நேற்று சாமி தரிசனம் முடித்து காரில் சொந்த ஊருக்கு திரும்பினர். இன்று அதிகாலை 3 மணிக்கு இவர்கள் வந்த கார் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை தடுப்பில் மோதி விபத்துகுள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்பூர், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம் அருகே தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திடீரென மாயமானதால் திருமணம் நின்று போனது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடியாத்தம்:

    வாணியம்பாடி அருகே உள்ள பெரிய வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி சுமதி. தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (வயது20). இவருடைய தாய்மாமன் விநாயகம் (28) குடியாத்தம் அனங்காநல்லூரில் வசித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.

    திருமணத்திற்கு நாள் குறித்து உறவினர்கள் நண்பர்கள் உட்பட அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்தனர். குடியாத்தம் அடுத்த காமாட்சி அம்மன் பேட்டையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    அதன் அருகே உள்ள மண்டபத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணப்பெண் ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்புக்கு பின்னர் வரவேற்பு நடந்தது.

    இன்று காலையில் கோவிலுக்கு செல்வதற்காக மணமக்கள் குடும்பத்தினர் உறவினர்கள் தயாராகி கொண்டிருந்தனர். மணப்பெண் ஐஸ்வர்யாவுக்கு உறவினர்கள் நலங்கு வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    திருமணத்திற்காக கோவிலுக்கு செல்லும் முன்பு புடவை மாற்றி வருவதாக ஐஸ்வர்யா சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் அவர் சென்ற அறையில்  பார்த்தபோது அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இந்த தகவல் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வேகமாக பரவியது. பல இடங்களில் தேடியும் மணப் பெண்ணை காணவில்லை. இதனால் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்றது.

    ஐஸ்வர்யாவின் பெற்றோர் இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.3 லட்சம் கேட்டு மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவை சேர்ந்தவர் கென்னடி வேலூரில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மகன் கோகுல் (வயது 18). காட்பாடி கிளித்தான் பட்டறையில் உள்ள தனியார் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல தொழில்பயிற்சி நிறுவனத்துக்கு சென்ற மாணவர் கோகுல் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் தொழிற்கல்வி நிறுவனம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் விசாரித்தனர். எங்கும் காணவில்லை.

    இந்த நிலையில் மாணவரின் தந்தை கென்னடிக்கு மர்ம நபர்கள் போனில் பேசினர்.

    உங்களது மகனை நாங்கள் தான் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.3 லட்சம் பணம் தந்தால் மட்டுமே விடுவிப்போம் என கூறி மிரட்டல் விடுத்தனர். இதனால் பதறிப்போன மாணவனின் பெற்றோர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் மாணவனை மீட்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மர்ம நபர்கள் பேசிய செல்போன் எண் மூலம் போலீசார் துப்பு துலக்க தொடங்கினர்.

    இதில் மர்ம கும்பல் வள்ளிமலை, மேல்பாடி பகுதிகளில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. அந்த பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    காட்பாடி முதல் ராணிப்பேட்டை வரையிலான சாலைகள் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதனால் மர்ம கும்பல் இன்று அதிகாலை 5 மணிக்கு வள்ளிமலை கோவில் அருகே மாணவனை விட்டு சென்றுவிட்டனர். தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவனை மீட்டனர்.

    இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தனர். அதில் அவரது தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் 3 மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதாக கோகுல் தெரிவித்தார்.

    இதனையடுத்து 3 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி மகள் திருமணத்திற்காக பரோலில் வந்தார். வேலூர் ஜெயிலில் உடமைகளை எடுக்க அனுமதி கேட்டு நளினி மனு அளித்துள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி மகள் திருமணத்திற்காக வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து பரோலில் வந்தார். சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியிருந்து மகள் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். 

    பரோலில் வந்த பிறகு அவர் இரண்டு முறை வேலூர் ஆண்கள் ஜெயிலில் உள்ள அவரது கணவர் முருகனை சந்தித்து பேசினார். இந்த நிலையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு நளினி மனு ஒன்று வழங்கியுள்ளார். அதில் வேலூர் பெண்கள் ஜெயிலில் தான் அடைக்கப்பட்டிருந்த அறையில் உள்ள எனது உடமைகளை எடுத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்த மனுவை வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணி மாறனிடம் நளினி வழங்கினார். அவர் அந்த மனுவை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
    பரோலில் வந்த நளினி வேலூர் ஜெயிலில் முருகனை 2-வது முறையாக இன்று சந்தித்து பேசினார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து, வேலூர் சத்துவாச்சாரியில் தங்கி உள்ளார்.

    தினமும் அவர், சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

    சிறையில் இருக்கும்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால் இப்போது ஜெயிலில் விட்டு வெளியே இருப்பதால், பாதுகாப்பு காரணங்கள் காட்டி நளினி, முருகன் சந்திப்பு நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் என் மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியதுள்ளது. அதனால் முருகனை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நளினி மனு அளித்தார். அந்த மனுவை, சிறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து கடந்த 13-ந் தேதி நளினி, முருகன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்த 15 நாட்கள் முடிந்து விட்டதால் 2-வது முறையாக முருகன்-நளினி சந்திப்பு இன்று நடந்தது.

    சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியிருந்த நளினி யை சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு கையெழுத்து போட்டதும், நளினியை பாதுகாப்புடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

    நளினி, முருகன் சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது. அப்போது மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து மாப்பிள்ளை பார்த்தது சம்பந்தமாக 2 பேரும் உருக்கமாக பேசிக்கொண்டனர். சந்திப்பு முடிந்ததும், நளினியை சத்துவாச்சாரியில் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
    ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    வேலூர் :

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேலூரில் நடந்த கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ரிசர்வ் வங்கியில் இருந்து ஏன் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி பெற்றீர்கள் என்று கேட்கிறார்கள். பொருளாதார மேதை என்று கூறப்பட்ட ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது 5 முறை ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் பெற்றுள்ளார்.

    சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்து தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை. முதல்-அமைச்சர் கூறியதுபோன்று அவர் நாட்டுக்கு பாரமாகத்தான் இருந்துள்ளார். பொருளாதார பின்னடைவை சரிசெய்ய என்ன முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

    ப சிதம்பரம்

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வது வரவேற்கத்தக்கது. ஆனால் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வதால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்?. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் வெளிநாடு செல்கிறார். இதன்மூலம் தமிழ்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும். தமிழ்நாட்டில் எதை எடுத்தாலும் அரசியலாக்குகிறார்கள். அதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. நாம் மக்கள் நலனுக்காக ஆதரவு தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், “மோடியின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான். மோடி செல்லும் இடமெல்லாம் விருது பெற்று வருகிறார். தவறு, ஊழல்செய்தவர்கள் மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது. ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது. அவருடைய குடும்பமே ஜாமீன் குடும்பமாக விளங்குகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தவறு செய்து விட்டார். ஒரு கட்சிக்கே தலைவராக இருக்க முடியாதவர் எப்படி நாட்டின் பிரதமராக வரமுடியும்?” என்றார்.

    காட்பாடி அருகே கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட டிராவல்ஸ் அதிபரை கடத்தி கொலை செய்து உடலை புதைத்த வழக்கில் 4 பேருக்கு வேலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    வேலூர்:

    காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 46). காட்பாடியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் துரைமூலை கிராமத்தை சேர்ந்த சாரதி என்பவரை அணுகி கடனாக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆந்திராவில் கிரானைட் தொழில் மிகவும் லாபகரமாக நடக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து கிரானைட் தொழில் செய்யலாம் என்று கூறியிருக்கிறார்.

    இதற்காக மனோகரனிடம் இருந்து சித்தூர் பகுதியில் வைத்து சாரதி கடந்த 2003-ம் ஆண்டு ரூ.9 லட்சத்தை பங்குத்தொகையாக பெற்றுள்ளார். ஆனால் பல வருடங்களாகியும் கிரானைட் தொழிலை தொடங்கவில்லை. இதனால் மனோகரன் தான்கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். சாரதி பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை.

    இதனால் சாரதி மீது சித்தூர் போலீசில் மனோகரன் புகார் செய்தார். அதன்பேரில் சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் சாரதி பணத்தை கொடுக்கவில்லை. பணத்தை கேட்டதற்கு அவரை சாரதி தாக்கி உள்ளார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் மனோகரன் புகார் செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சாரதி, மனோகரனை கொலைசெய்ய திட்டமிட்டார். இதற்காக சேண்பாக்கத்தை சேர்ந்த தனது சித்தி மகன் சீனிவாசன் (25) என்பவரை அணுகினார். அதற்கு சம்மதித்த சீனிவாசன், சாரதியை கொலைசெய்ய அதேப்பகுதியை சேர்ந்த முனியாண்டி (35), வெள்ளை என்கிற ஜெயராஜன் (23), செந்தூர்நாதன் (28), அசோக் (22), ராஜேஷ் (20), குமார் என்கிற ஜெயக்குமார் (34) ஆகியோரை ஏற்பாடு செய்தார்.

    இவர்கள் அனைவரும் சேர்ந்து 28.3.2008 அன்று மனோகரனை கடத்திச்சென்று கொலை செய்தனர். பின்னர் அவருடைய உடலை கவசம்பட்டு பஞ்சாயத்துக்கு சொந்தமான ஒரு இடத்தில் புதைத்து விட்டு சென்று விட்டனர். அந்த இடத்தில் துர்நாற்றம் வீசியதால் அதுகுறித்து கிராமநிர்வாக அலுவலர் பிரபாகரன் கே.வி.குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சென்று அந்த இடத்தை தோண்டிபார்த்தபோது டிராவல்ஸ் அதிபர் மனோகரன் கொலை செய்யப்பட்டு, உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரதி உள்பட 8 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்றபோதே சாரதி, சீனிவாசன், வெள்ளை என்கிற ஜெயராஜன் ஆகிய 3 பேர் இறந்து விட்டனர். மற்ற 5 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி வெற்றிச்செல்வி தீர்ப்பு கூறினார். அதில் முனியாண்டி, செந்தூர்நாதன், அசோக், ராஜேஷ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் அண்ணாமலை ஆஜரானார்.
    ×