என் மலர்
செய்திகள்

பேனர் வைப்பதில் மோதல்: நாம் தமிழர் கட்சி பிரமுகர் படுகாயம்
வாலாஜா:
ராணிப்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அப்புன். இவரது மகன் குபேந்திரன் என்கிற வில்சன் (வயது 28). இவர் ராணிப்பேட்டை நாம் தமிழர் கட்சி நகர செயலாளராக உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி அம்மன் கோவில் தெரு அருகே பேனர் வைத்துள்ளார்.
அதே தெருவை சேர்ந்தவர் வேளாங்கன்னி (28). இவர் புரட்சி பாரதம் கட்சியின் ராணிப்பேட்டை நகர செயலாளராக உள்ளார்.
இவர் தனது பிறந்தநாளையொட்டி நேற்று மாலை பேனர் வைக்க தனது நண்பர்களான உதயகுமார் (27), சூர்யா (25), காளி (26), மகேஷ் (27), மனோஜ் (25), லோகேஷ் (25) ஆகியோருடன் வந்துள்ளார்.
அப்போது குபேந்திரனுக்கும், வேளாங்கன்னிக்கும் இடையே பேனர் வைப்பதில் தகராறு ஏற்பட்டு ஓருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் குபேந்திரன் படுகாயம் அடைந்தார். இவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து குபேந்திரன் ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குபதிவு செய்து உதயகுமாரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.






