search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident youth death"

    அந்தியூர் அருகே விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    பவானி வருணபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 22). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பவானியில் இருந்து அந்தியூர் குருநாத சுவாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    கோவில் விழாவில் பங்கேற்பதற்காக அவர் வந்தார். அந்தியூரைஅடுத்த செம்புலிச்சாம்பாளையம் அருகே வந்த போது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

    அப்போது அந்த வழியாக ஈரோட்டை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டி வந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட மாதேஷ் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.

    சிகிச்சைக்காக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாதேஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குரோம்பேட்டையில் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    தாம்பரம்:

    அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (29). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தார். நேற்று மாலை தனது நண்பரை பார்க்க குரோம்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பஸ் டிரைவர் சுந்தரராஜன் (68) கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.

    கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற தனியார் நிறுவன மேலாளர் மரத்தில் கார் மோதி பலியானார்.

    தேவதானப்பட்டி:

    தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் ஒரு காரில் கொடைக்கானலுக்கு நேற்று இரவு சுற்றுலா புறப்பட்டார்.

    நள்ளிரவு சமயம் காட்ரோடு அருகே மலைச்சாலையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது.

    இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர்கள் 6 பேரும் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×