என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,205 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,205 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 16,211 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 294 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியாத்தம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்து மோதியதில் ஆட்டோவில் சென்ற தந்தை சிவா, மகன் சஞ்சய் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.57 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், ஓய்வுப்பெற்ற அரசு என்ஜினீயர். இவருடைய மகன் ஈஸ்வர் சீனிவாசன் (வயது20). இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால், சீனிவாசன் வேலூரில் உள்ள தனியார் (சி.எம்.சி.) மருத்துவக்கல்லூரிக்கு வந்தார். அங்கு மெடிக்கல் சீட் சம்மந்தமாக யாரை அணுகுவது என்று விசாரித்துள்ளார். அங்கிருந்த சிலர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் அந்த சமயம் பாதிரியாராக இருந்த சாதுசத்தியராஜ் (67) என்பவரை பார்க்கும் படி தெரிவித்தனர். அதையடுத்து சீனிவாசன் சென்று சாதுசத்தியராஜை பார்த்தார்.
அவர் காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச்செயலாளர் தேவகுமார் (33), அவரின் தம்பியான அன்பு கிராண்ட் (30) ஆகியோரை பார்க்கும்படியும், அவர்கள் சொல்வதுபோல் செய்தால் கண்டிப்பாக மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, சீனிவாசன் அவர்கள் இருவரையும் சந்தித்தார். அவர்கள் ரூ.57 லட்சம் கொடுத்தால் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக அவரிடம் தெரிவித்தனர். மகனை டாக்டர் ஆக்க ஆசைப்பட்ட சீனிவாசன் அவர்கள் கேட்ட பணத்தை தவணை முறையில் வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் கொடுத்துள்ளார்.
ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் சீட் வாங்கித் தரமாலும், பணத்தையும் திருப்பி தராமலும் 3 பேரும் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் அவர்களிடம் கேட்டபோது, பணம் தரமுடியாது என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, சீனிவாசன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் லக்குவன் மற்றும் போலீசார் சாதுசத்தியராஜ், தேவகுமார், அன்புகிராண்ட் ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததும், சாது சத்தியராஜ் சாய்நாதபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிவதும் உறுதியானது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

நளினி தன்னுடைய உடல்நல சிகிச்சைக்காக 3 மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளருக்கு சிறைத்துறை அதிகாரிகள் வழியாக மனு அளித்துள்ளார்
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நளினியின் மகள் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக நளினிக்கு பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் நளினி 3 மாதம் பரோல் கேட்டு மனு அளித்துள்ளார். இதுகுறித்து அவரது வக்கீல் புகழேந்தி கூறுகையில், ‘சிறை விதிகளுக்குட்பட்டு நளினி தொலைபேசி மூலம் இன்று (நேற்று) என்னிடம் பேசினார். அப்போது அவர் தன்னுடைய உடல்நல சிகிச்சைக்காக 3 மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளருக்கு சிறைத்துறை அதிகாரிகள் வழியாக மனு அளித்துள்ளார்’ என்றார்.

வேலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அருகே உள்ள தார்வழி பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார் (வயது 30). இவருடைய மனைவி பொன்னி. விஜயக்குமார் அம்மி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விஜயக்குமார் அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதம் முடிந்ததால் வேலூர் மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் வாங்க அசைவ பிரியர்கள் குவித்தனர். மீன் விலையும் அதிகரித்திருந்தது.
வேலூர்:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, சைவம் மட்டும் சாப்பிடுவார்கள். இதனால் கடந்த மாதம் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. காய்கறிகளின் விற்பனை அதிகமாக இருந்தது. இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் மீன் விலை குறைந்திருந்தது.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து அசைவ பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டத்தொடங்கி விட்டனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.
கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு மீன் வரவழைக்கப்படுகிறது. லாரிகளில் கொண்டுவரப்பட்ட மீன்கள் நேற்று காலையிலே விற்று தீர்ந்துவிட்டன. விற்பனை அதிகரித்ததுடன் மீன்களின் விலையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது.
ரூ.150-க்கு விற்ற மத்தி மீன் நேற்று ரூ.200-க்கும், ரூ.300-க்கு விற்பனையான வஞ்சிரம் ரூ.500 முதல் 600 வரைக்கும், ரூ.120-க்கு விற்ற கட்லா ரூ.200-க்கும் விற்பனையானது.
மீன்வாங்க பொதுமக்கள் அதிக அளவில் மார்க்கெட்டுக்கு வந்திருந்தனர். அவர்களில் பலர் கொரோனா அச்சமின்றி முககவசம் அணியாமல் வந்திருந்தனர்.

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
வேலூர்:
வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் அஜய் (வயது 22). சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஹாஜிராபேகம் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் நேற்று திருமணம் செய்துகொண்டு வேலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அஜய் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில், நான் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். ஹாஜிராபேகமும், நானும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இதை அறிந்த அவருடைய பெற்றோர், விருப்பம் இல்லாத வேறு நபருக்கு எனது காதலியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் சட்டப்படி திருமணம் செய்து கொண்டோம். இதையறிந்த எனது மனைவியின் உறவினர்கள் போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
குடியாத்தத்தில் ஆசை வார்த்தைகளை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் கணேஷ் (வயது 28). இவர், குடியாத்தத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பிச்சனூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி, 9-ந்தேதி கடத்தி சென்றதாக, மாணவியின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை கணேஷ், மாணவியோடு குடியாத்தம் பகுதிக்கு வர இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு ராமு ஆகியோர் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் வந்து கண்காணித்தனர்.
அப்போது ஒரு பஸ்சில் இருந்து கீழே இறங்கிய கணேஷ், உடன் வந்த மாணவியை போலீசார் விரைந்து சென்று பிடித்தனர். அவர்களை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். கணேஷ், மாணவியை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்று திருவண்ணாமலையில் வைத்து கட்டாயத் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்துக்குப் பின் சென்னை புறநகர் சோழிங்கநல்லூர் பகுதியில் தங்கி இருந்ததாகவும், கையிலிருந்த பணம் தீர்ந்து போனதால் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி செல்ல குடியாத்தம் வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து கணேசை, போக்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் ஏராளமான ஆட்டோக்களை நிறுத்தி, அதன் டிரைவர்கள் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, பழைய பஸ் நிலையம் மற்றும் சாரதி மாளிகை போன்ற இடங்களில் ஆட்டோக்களை நிறுத்த போலீசார் தடை விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் போக்குவரத்துப் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார், அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நாளை (திங்கட்கிழமை) உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 1,301 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளதாக வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டு தெரிவித்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் 5 வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
அதன்படி, 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே வளாகத்தில் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட வேண்டும். அதே வளாகத்தில் புதிய கட்டிடம் இல்லையெனில் அதே பகுதியில் உள்ள வேறு அரசு, தனியார் கல்லூரி, பள்ளியில் மாற்றப்பட வேண்டும்.
ஒரு வாக்குச்சாவடி வளாகத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளை 1,500 வாக்காளர்களுக்கு மிகாமல் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இரு வாக்குச்சாவடிகளில் அதிகமாக வாக்காளர் உள்ள வாக்குச்சாவடியில் இருந்து அதே பகுதியில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் அந்த வாக்குச்சாவடிக்கான பகுதிகள் இணைக்கப்பட வேண்டும். ஒரு வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி பெயர் மாற்றப்பட்டிருப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
இந்த வழிமுறைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் 1,300 வாக்குச்சாவடிகளில் பின்பற்றப்பட்டு உள்ளது. புதிதாக அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருமலையில் மலைவாழ் மக்களுக்காக புதிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது மாவட்டத்தில் 1,301 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. மேற்கண்ட 5 வழிமுறைகளிள் அடிப்படையில் 181 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காட்பாடி தொகுதியில் 248 மையங்களும், வேலூரில் 244 மையங்களும், அணைக் கட்டில் 265 மையங்களும், கே.வி.குப்பத்தில் (தனி) 254 மையங்களும், குடியாத்தத்தில் 290 மையங்களும் உள்ளன. இந்த பட்டியல் குறித்து அரசியல் பிரமுகர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் போன்றோர் ஏதேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

வேலூரில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் விஜயசாரதி தலைமை தாங்கினார். பொருளாளர் சஜீன்குமார், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கோட்டி என்ற கோவேந்தன், மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, சமூக ஊடக அமைப்பாளர் தமிழரசன், செய்தி தொடர்பாளர் நாகராஜன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு பணிகளில் எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை குறைத்து முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் 2-ம் பகுதி செயலாளர் ரீகன் நன்றி கூறினார்.
இந்தாண்டில் இதுவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 182 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் 35 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பிற மாநிலங்களுக்கு கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்கும்படி மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு தலைமையில் பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் அந்தந்த தாலுகா வழங்கல் அலுவலர்கள் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் வீடுகளில் பதுக்கி வைத்திருக்கும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறார்கள். அதேபோன்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரும் வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். வாகன தணிக்கை மற்றும் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை பிற மாநிலங்களுக்கு வாகனங்களில் கடத்தி செல்ல முயன்றது மற்றும் வீடுகளில் பதுப்பி வைத்திருந்தது என்று 182 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.
இது தொடர்பாக 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் என்று ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதைத்தவிர ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்படுத்திய 60 சமையல் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்தனர்.