என் மலர்
நீங்கள் தேடியது "polling stations"
- ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையு டன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது.
ஈரோடு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்கா ளர் அடையாள அட்டையு டன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய் வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணியினை விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது. ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் வாக்கு சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் பொதுமக்கள் சென்று 6-பி படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.
- மறுசீரமைக்கப்பட்ட வாக்குசாவடிகளின் பட்டியலை ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டார்.
- வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் 303 வாக்குச் வாக்குச்சாவடிகளும், திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச் வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச் வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 385 வாக்குச் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1370 வாக்குச்சாவடிகள் உள்ளன.
நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிக்கவும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.
மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர்கள் கார்த்திகேயன் (தேர்தல்), முருகேசன (ராமநாதபுரம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேற்கு திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 11ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 81 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள ஓட்டு போட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வரும் 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BoothCapturing #TripuraWest
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் பாக்யராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. அதனால், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய, வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் பொருத்த வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வசதிகளை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்படவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் வாக்கு சரிபார்க்கும் எந்திரம் நிறுவப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை சரியான பதில் அளிக்கவில்லை.
கோவா சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பயன்படுத்திய நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஒப்புகை சீட்டு எந்திரத்தை பொருத்தும் நடைமுறையை படிப்படியாக மேற்கொள்ளவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் இந்த எந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில், விடுபட்ட வாக்காளர்கள் குறிப்பாக 18 முதல் 21 வயதுடைய வாக்காளர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
மேலும், இந்த முகாமில், வாக்காளர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நீக்கம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, முகவரி திருத்தம் செய்ய படிவம் 8, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்கள் கொடுத்தனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலு வலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்களும் பணியாற்றினார்கள். காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகாம் நடைபெற்றது. இந்த பணிகளை கண்காணிக்க 10 துணை தாசில்தார் நிலையில் உள்ள அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். முகாம்கள் நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதே போல கோவை சாய்பாபா காலனி ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை அம்மன்அர்ச்சுனன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது பப்பாயா ராஜேஷ், பாலமுரளி, கமலகண்ணன், ஆர்.கே.ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இது குறித்து வாக்குச்சாவடி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த முறை 2 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகள் தான் அமைக்கப்பட்டுருந்தன. தற்போது 178 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம்கள் நடத்தப்பட்டன. 1.1.2019-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி, கல்லூரி மாற்று சான்றிதழ் ஆகியவற்றை வாக்காளர் சேர்ப்பதற்கான படிவம்-6 உடன் இணைத்து கொடுக்க வேண்டும்.
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவில்லை என்று கூறி பலர் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 25 வயது வரை இருந்தால் அவர்கள் இந்த முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் மண்டல அலுவ லகத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். நேற்று நடந்த முகாமில் கூட்டம் அவ்வளவாக இல்லை. மேலும் வருகிற 23-ந் தேதி, அடுத்த மாதம்(அக்டோபர்) 7 மற்றும் 14-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அப்போது பலரும் விண்ணப்பம் அளிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.