search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் கலெக்டர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் உள்ளனர்.
    • வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று ஊரிசு கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    வேலூர் மாவட்டத்தில் இளம் வாக்காளர்கள், முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கல்லூரிகளில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

    கல்லூரி பயிலும் முதல்முறை வாக்களிக்க உள்ள மாணவ, மாணவிகள் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று தங்களுடைய வாக்கை செலுத்தி அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் புகைப்படம் (செல்பி) எடுத்துக்கொள்ள வேண்டும்.

    முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நம்முடைய மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு தினத்தன்று தொப்பி பரிசளிக்கப்பட உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரதத்திற்கும் மேற்பட்ட முதல் முறை வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் தங்களுடைய மனசாட்சிக்கு உட்பட்டு வாக்கினை செலுத்த வேண்டும். வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை. உங்களுடைய வீட்டில் உள்ள பெரியவர்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து எடுத்துரைத்து நம்முடைய மாவட்டம் 100 சதவீதம் வாக்குப்பதிவை அடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
    • திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

    திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

    திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும் விதிமீறல்கள் இருப்பின் பொதுமக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்-9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம்-9442999120, தாசில்தார்கள் வேலூர்-9445000508, காட்பாடி-9445000510. குடியாத்தம்-9445000509, பேர்ணாம்பட்டு-9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவனுக்கு மாற்று சன்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு நீக்கிய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அவரிடம் கோவை கோகுலம் காலனி இந்திரா நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒரு மனு அளித்தார்.

    நான் கோவை முல்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார்.

    பண கஷ்டம் காரணமாக என்னால் இந்த வருடம் கல்வி கட்டணத்தை மொத்தமாக செலுத்த முடியவில்லை. எனது தந்தை மாத மாதம் கட்டி விடுகிறேன் என கூறினார். ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை ஏற்கவில்லை. எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிவிட்டனர். அதன் பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர அனுமதி கேட்டோம்.

    அவர் பி.என். புதூரில் உள்ள மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசி அவரை சந்தித்து சேர்ந்து கொள்ளும் படி கூறினார். ஆனால் மாநகராட்சி தலைமை ஆசிரியை என்னை சேர்த்து கொள்ள மறுத்துவிட்டார்.

    எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிய தனியார் பள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    ×