என் மலர்
செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் விஜயசாரதி தலைமை தாங்கினார். பொருளாளர் சஜீன்குமார், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி செயலாளர் கோட்டி என்ற கோவேந்தன், மாவட்ட துணை செயலாளர் இளங்கோ, சமூக ஊடக அமைப்பாளர் தமிழரசன், செய்தி தொடர்பாளர் நாகராஜன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு பணிகளில் எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை குறைத்து முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் 2-ம் பகுதி செயலாளர் ரீகன் நன்றி கூறினார்.
Next Story