என் மலர்
செய்திகள்

வேலூர் போக்குவரத்துப் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்ட காட்சி.
வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் ஏராளமான ஆட்டோக்களை நிறுத்தி, அதன் டிரைவர்கள் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, பழைய பஸ் நிலையம் மற்றும் சாரதி மாளிகை போன்ற இடங்களில் ஆட்டோக்களை நிறுத்த போலீசார் தடை விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் போக்குவரத்துப் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் நேற்று காலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார், அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நாளை (திங்கட்கிழமை) உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story