என் மலர்
திருவண்ணாமலை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் பல்வேறு துறை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 123 பெண்கள் உள்பட 177 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை கலெக்டர் சந்தீப்நந்தூரி போட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி போட்டுக் கொண்டார்.
முன்னதாக அவருக்கு உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் பல்சோமீட்டர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கணினியில் ஆன்லைன் மூலம் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு 10 ஆயிரம் நபர்கள் பதிவு செய்து தற்போது வரை 2500 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் பணியாற்றிய வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை உட்பட மற்ற துறைகளில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி வருவாய்த் துறை சார்பாக நானும் தடுப்பூசி போட்டு கொண்டேன். இந்த தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இதுவரை யாருக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படவில்லை. இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என முதல் கட்டமாக 6 இடங்களில் போடப்பட்டு வந்தது. தற்போது 24 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருமால்பாபு, டாக்டர்கள் ஷகீல்அகமது, ஸ்ரீதர், நலப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அஜிதா ஆகியோர் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள தானாநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 90), இவருடைய மனைவி காயாம்பாள் (80), தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
கந்தசாமி தம்பதியை கவனிக்க ஆளில்லை. இதனால் வறுமையில் வாடி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட கந்தசாமி, காயாம்பாள் இருவரும் நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை அவர்கள் வீட்டில் இறந்து கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
சசிகலா அ.தி.மு.க. பொது செயலாளராக இருக்கும் போது தான் சிறைக்கு சென்றார். இதனால் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு உரிமை உள்ளது.
திராவிட இயக்கத்தை பொறுத்தவரை பொது செயலாளர் தான் கட்சியை இயக்க முடியும். அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா பொது செயலாளர் ஆனார்.
கே.பி.முனுசாமி கருத்தை வைத்து பார்க்கும் போது சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வதாக தெரிகிறது.
சசிகலாவை சேர்க்காவிட்டால் அ.தி.மு.க. 2-ஆக உடையும்.
வரும் தேர்தலில் தி.மு.க. 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தை படைக்கும் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.
ஜே.பி.நட்டாவை பார்த்து தமிழக மக்கள் ஓட்டு போடும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்படி திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று காலையில் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கள மேளதாளத்துடன் கோவிலில் இருந்து அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு வந்தார். அங்கு சூலத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது சூலத்திற்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை வரை சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு கோவிலுக்கு திரும்பினார்.
அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி திருவண்ணாமலை பகுதியை ஆண்டு வந்த வல்லாள மகாராஜா என்ற மன்னர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம் அவர் தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார். ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர் உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறியுள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார். தைப்பூசத்தின் போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார்.
அப்போது போர்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனான பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாக நேற்று மாலை அறிவொளிப்பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்து விட்டு அருணாசலேஸ்வரர் சென்றபோது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து மேளதாளங்களின்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.






