என் மலர்
செய்திகள்

கைது
பெரணமல்லூர் அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவர் கைது
பெரணமல்லூர் அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, சப்- இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணியாபுரம் அருகே செய்யாற்றில் இருந்து வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் கடத்திவந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விண்ணமங்கலம் கிராமத்தைசேர்ந்த லாரி டிரைவர் ராமானுஜம் (வயது 46) என்பவரை கைது செய்தனர். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






