என் மலர்
செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியை தனலட்சுமி வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.
வந்தவாசியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வந்தவாசியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சைக்கிள் வரதராஜ முதலி தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி, இவர் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவும், பின்பக்க கதவும் திறந்து கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து பிச்சைமணிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோக்கள் திறந்து, துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.
போலீசார் விசாரணையில், பூட்டப்பட்டிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து, பீரோவில் இருந்த 3¼ பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதேபோல் வந்தவாசி கனகராமசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி, ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பூட்டப்பட்டிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் பட்டு சேலைகள், 2 அமெரிக்கன் டாலர், 2 ரியால் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் 2 வீடுகளிலும் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவங்கள் குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வந்தவாசியில் 2 வீடுகளின் பூட்ைட உடைத்து நகை, பணம் திருடி சென்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






