என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • புயல், வெள்ள பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
    • பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பேரிடர் இன்னல்குறைப்பு விழிப்புணர்வு பேரணி தாசில்தார் மலர்கொடி தலைமையில் நடைப்பெற்றது. அப்போது அவர் பேசும்போது,

    எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் புயல், வெள்ள பாதிப்புகளை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் அர்ப்பணிப்பு தன்மையுடன் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், அப்போதுதான் பேரிடர் இன்னல்களில் இருந்து மக்களை காக்க முடியும் என்றார்.

    நிகழ்ச்சியில் பேரிடர் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம் நடைப்பெற்றது. பேரணி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரைநடைப்பெற்றது.

    பேரணியில் பாலம் தொண்டுநிறுவன செயலாளர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்குமார், நிலைய தீயணைப்பு அலுவலர் காளிதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் சிவக்குமார், முரளிதரன், , கிராம நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம், பாரதிதாசன் உறுப்பு கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள். கலந்துக்கொண்டனர்.

    • ஆவணியப்பன் தனது நண்பர் ஆனந்தபாபுவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ஆவணியப்பன் உயிரிழந்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் ஆவணியப்பன் (வயது 22) .

    இவர் தனது நண்பர் ஆனந்தபாபுவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    அப்போது பூண்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது வளைவு அருகே நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

    இதில் ஆவணியப்பனுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆவணியப்பன் இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது.
    • பஸ்சில் வந்த மாணவர்களில் 3 பேர் லேசான காயமடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளை வாகனங்கள் ஏற்றி சென்று வருவது வழக்கம்.

    அதேபோல் இன்று காலை ராஜகோபாலபுரம் பகுதி வரை சென்ற ஒரு தனியார் பள்ளி பஸ் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக் கொண்டு மன்னார்குடி நோக்கி வந்தது. அப்போது ராஜகோபாலபுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விட்டது. இதனால் பஸ்சில் வந்த மாணவர்களில் 3 பேர் லேசான காயமடைந்தனர்.

    மற்றவர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்த மாணவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.

    விபத்து பற்றி அறிந்தும் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதிக்கு வந்து பார்க்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த தலையாமங்கலம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • சிறந்த ஆசிரியர்களுக்கான நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது.
    • ரோட்டரியன் வீரக்குமார், டிரைனர் ரோட்டரியன் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்

    திருவாரூரில் உள்ள ஹோட்டல் செல்விஸ்சில் விஜயபுரம் ரோட்டரி சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர்ஸ் அவார்டை மண்டல துணை ஆளுநர் ரோட்டரியன் சொக்கலிங்கம் கலந்து கொண்டு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விஜயபுரம் ரோட்டரி தலைவர் மற்றும் சாசன தலைவர் ரோட்டரியன் அபி பேரீச்சை சுப்பிரமணியன், செயலாளர் ரோட்டரியன் செந்தில்குமார், பொருளாளர் ரோட்டரியன் வீரக்குமார், டிரைனர் ரோட்டரியன் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் மூவரும் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி வந்தனர்.
    • ஒரு லாரி முந்தி சென்ற போது பஸ் மீது உரசியதில் 3 மாணவர்களும் காயம் அடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதி நார்த்தாமலை தளபதி மகன் கோகுல் (வயது18), ஜீவானந்தம் மகன் கோகுல் (17). இவர்கள் இருவரும் கோட்டூர் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்கள்.

    நரசிங்கம்பேட்டையை சேர்ந்த திருமாறன் (16). மன்னார்குடி தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த மாணவர்கள் மூவரும் இன்று காலை கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறி வந்தனர்.

    பஸ்ஸை டிரைவர் தவக்குமார் (45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் மன்னார்குடி தேரடி அருகே வரும்போது ஒரு லாரி முந்தி சென்ற போது பஸ் மீது உரசியதில் 3 மாணவர்களும் காயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்களை மீட்டு மன்னார்குடி தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.
    • பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி, அக்.13-

    திருத்துறைப்பூண்டி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம், குழுவின் தலைவரும் நகர்மன்ற தலைவருமான கவிதாபாண்டியன் தலைமையிலும், ஆணையர் அப்துல்ஹரிஸ் முன்னிலையிலும் நடை்பெற்றது.

    கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையிலிருந்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி கலந்துக்கொண்டு பேசும்போது, பிறந்தது முதல் 18 வயதுடைய அனைவரும் குழந்தைகள் தான். இவர்களுக்கு அனைத்து உரிமைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கல்வி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாத பெற்றோர்களிடம் விழிப்புணர்வு செய்யப்படும். குழந்தை திருமணம், பாலியல் சீண்டல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது.

    பிறந்தது முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி, சத்தான உணவுகள், மருத்துவ கண்காணிப்பு அவசியம், குழந்தைகளை தத்து எடுக்க சட்டப்பூர்வ வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளிலும், பள்ளிகள், குழந்தை பாதுகாப்பு இல்லங்களிலும் தவறுகள் நடப்பதை நாம் அனைவரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்டணம் இல்லா 1098 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும், பெற்றோர்கள் தினமும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி அவர்கள் தேவையை கண்டறிய வேண்டும், பேரிடர் காலங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

    படிக்கும் பள்ளிகளில் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு செல்லாமல் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.

    குழந்தை பாதுகாப்பு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன்.

    கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், கவுன்சிலர்கள் எழிலரசன், ரவி, முருகவேல், சமூக பணியாளர் பாரதி, விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    • இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார்.
    • தகவலறிந்த சூரியாவின் உறவினர்கள் சூர்யாவைமீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மன்னார்குடி. அக்.13-

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அசேஷம் கிராமத்தை தேர்ந்த சூர்யா (47) என்பவர் பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பெருகவாழ்ந்தான் அருகே பட்டிமார் கிராமத்தை சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் ஒரத்தூர் கிராமத்தில் இருந்து பட்டிமார் நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    அப்போது பாளையூர் எனுமிடத்தில் வந்தபோது பெர்னாண்டஸ் வந்த இருசக்கர வாகனத்தை மறித்த 6 பேர் கொண்ட கும்பல் பெர்னாண்டசை தாக்கி அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் பெர்னாண்டஸ் புகார் அளித்தார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த தனிப்பிரிவு ஏட்டு சூர்யா, பெர்னாண்டஸ்ஸை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு அசேஷத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    அப்போது பாலையூர் எனும் இடத்தில் சென்ற போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தனிப்பிரிவு போலீஸ் சூரியாவை கல் மற்றும் கம்புகளால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

    தகவலறிந்த சூரியாவின் உறவினர்கள் சூர்யாவைமீட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் சூர்யாவை தாக்கிய ஜீவானந்தம், அசோகன், ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது.
    • கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி எல்லையில் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் சார்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஆரம்பத்தில், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்தது,

    பின்னர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கல்லூரிக்கு என்ற தனி இடத்தை தேர்வு செய்து, கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு, கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அரசு கல்லூரியாக மாறியது. அரசு கல்லூரியாக மாறிய பின்பு, கல்லூரி கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பிற்கான மின் கட்டண தொகை 17 மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்தது.

    மின்சார வாரியம், பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் கற்பித்தல் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காக, மின் இணைப்பை துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில், கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது. மின் கட்டண தொகை அதிகமான நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் நன்னிலம் அலுவலகத்தில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் நன்னிலம் அரசு கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதனால் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் கவுரவ பேராசிரியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு தரப்பட்ட மின்னிணைப்பு, மின் கட்டண பாக்கியை துண்டிக்கப்பட்டது நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
    • பாடத்திற்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடைப்பெறுகிறது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகள் , நடுநிலைப்பள்ளிகள் ,அரசு உதவிப் பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி முகாம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலையில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

    2025 ஆம் ஆண்டிற்க்கு தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் கற்றல் அடைவை பெற வேண்டி தொடங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

    இதில் இரண்டாம் பருவத்தில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் , கணிதம் ஆகிய பாடங்களை எவ்வாறு நடத்தப்பட்ட வேண்டும் , கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி புத்தகங்கள் ஆகியவைகளை பாடத்திற்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடைப்பெறுகிறது. வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுகந்தி,வட்டாரக்கல்வி அலுவலா்கள் தாமோதரன் , ஜெயலெட்சுமி ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா். இதில் 7 ஆசிரியர் பயிற்றுனர்கள், 36 ஆசிரியர்கள் பயிற்சி கருத்தாளர்களாக செயல்படுகின்றனர். மூன்று நாட்கள் நடைப்பெறும் இப்பயிற்சியில் 212 ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

    • மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மணிமேகலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் டி. பி .சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜெகவர், முத்துப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் கோவி சேகர், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் இக்பால் ராஜா, மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் கோபு மற்றும் மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தன்னம்பிக்கை, விழிப்புணர்வு், நல்லொழுக்கம், கல்வியையும் ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் அபிநயா பாபு கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மாணவியரிடையே எடுத்துரைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் தன்னம்பிக்கை, விழிப்புணர்வு், நல்லொழுக்கம், கல்வியையும் ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

    தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் வரவேற்றார். ரோட்டரி மண்டலம் 25-ன் உதவி ஆளுநர் சிவக்குமார் மற்றும் சங்கத்தின் மருத்துவ சேர்மேனும், திருத்துறைப்பூண்டி அரசு தலைமை மருத்துவருமான பாபு தலைமை தாங்கினா.

    சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் அபிநயா பாபு கலந்துகொண்டு பெண் குழந்தைகள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மாணவியரிடையே எடுத்துரைத்தார்.

    • அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் அரசு மாதிரி மேல்நிலை இரண்டாமாண்டு வகுப்புகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் அரசு மாதிரி மேல்நிலை இரண்டாமாண்டு வகுப்புகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தமிழக அரசால் சிறப்புத் திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடத்தப்பட்ட வினாடி, வினா தேர்வு மற்றும் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் மாநில கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

    அதனடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    மாணவ, மாணவிகளின் விருப்பத்தின் பெயரில் தற்போது 40 மாணவர்கள், 40 மாணவிகளுடன் அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உண்டு, உறைவிடத்துடன் கூடிய மாதிரி பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இம்மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்வுகளிலும் பங்கேற்கும் வகையில் சிறப்பு பாட வல்லுநர்களை கொண்டு திறன் கரும்பலகை எனப்படும் ஸ்மார்ட் போர்ட் மூலம் இணைய வகுப்புகள், பல்வேறு பள்ளிகளிலுள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டு நேரடி வகுப்புகளும் நடத்தப்படும்.

    மேலும், தினசரி வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் மாணவ, மாணவிகளும் தங்கி பயில்வதற்கான அனைத்து வசதிகளுடன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இந்த வசதிகளை முறையாக பயன்படுத்தி பெற்றோர், ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் கலியபெருமாள், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×