என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டபூர்வமாக மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும்
    X

    திருத்துறைப்பூண்டி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு கூட்டம்.

    சட்டபூர்வமாக மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும்

    • அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.
    • பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி, அக்.13-

    திருத்துறைப்பூண்டி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டம், குழுவின் தலைவரும் நகர்மன்ற தலைவருமான கவிதாபாண்டியன் தலைமையிலும், ஆணையர் அப்துல்ஹரிஸ் முன்னிலையிலும் நடை்பெற்றது.

    கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையிலிருந்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி கலந்துக்கொண்டு பேசும்போது, பிறந்தது முதல் 18 வயதுடைய அனைவரும் குழந்தைகள் தான். இவர்களுக்கு அனைத்து உரிமைகளும் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கல்வி கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாத பெற்றோர்களிடம் விழிப்புணர்வு செய்யப்படும். குழந்தை திருமணம், பாலியல் சீண்டல்கள் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது.

    பிறந்தது முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி, சத்தான உணவுகள், மருத்துவ கண்காணிப்பு அவசியம், குழந்தைகளை தத்து எடுக்க சட்டப்பூர்வ வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளிலும், பள்ளிகள், குழந்தை பாதுகாப்பு இல்லங்களிலும் தவறுகள் நடப்பதை நாம் அனைவரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கட்டணம் இல்லா 1098 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும், பெற்றோர்கள் தினமும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி அவர்கள் தேவையை கண்டறிய வேண்டும், பேரிடர் காலங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

    படிக்கும் பள்ளிகளில் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு செல்லாமல் கண்காணிக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் நோயற்ற ஆரோக்கியமாக அமையும் என்றார்.

    குழந்தை பாதுகாப்பு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன்.

    கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், கவுன்சிலர்கள் எழிலரசன், ரவி, முருகவேல், சமூக பணியாளர் பாரதி, விஜய் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×