search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜயபுரம் ரோட்டரி சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கல்
    X

    சிறந்த ஆசிரியர்களுக்கு விஜயபுரம் ரோட்டரி சார்பில் நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கினர்.

    விஜயபுரம் ரோட்டரி சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கல்

    • சிறந்த ஆசிரியர்களுக்கான நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது.
    • ரோட்டரியன் வீரக்குமார், டிரைனர் ரோட்டரியன் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்

    திருவாரூரில் உள்ள ஹோட்டல் செல்விஸ்சில் விஜயபுரம் ரோட்டரி சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான நேஷன் பில்டர்ஸ் அவார்டு வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு நேஷன் பில்டர்ஸ் அவார்டை மண்டல துணை ஆளுநர் ரோட்டரியன் சொக்கலிங்கம் கலந்து கொண்டு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் விஜயபுரம் ரோட்டரி தலைவர் மற்றும் சாசன தலைவர் ரோட்டரியன் அபி பேரீச்சை சுப்பிரமணியன், செயலாளர் ரோட்டரியன் செந்தில்குமார், பொருளாளர் ரோட்டரியன் வீரக்குமார், டிரைனர் ரோட்டரியன் அண்ணாதுரை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×