என் மலர்
திருவாரூர்
- தியாகராஜாருக்கு திருவாதிரை திருவிழா மகா அபிஷேகம்.
- பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி.
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.
இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலில் ஆண்டிற்கு 2 முறை தியாகராஜர் சாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திருவாதிரை திருவிழாயொட்டி பாத தரிசன விழா இன்று நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி தியாகராஜா சாமிக்கு திருவாதிரை திருவிழா மகா அபிசேகம் நடந்தது.
அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர்.
பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் தலைமையில் பணியாளர் செய்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆடுகள், மாடுகள், நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை.
- கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க மருந்து முதலியவை வழங்கப்பட்டது.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் பேரளத்தை சுற்றியுள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அந்தப் பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி சிறப்பு முகாம் என்பது நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இஞ்சிக்குடி என்கின்ற கிராமத்தை தேர்ந்தெடுத்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
பின்பு அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்பகுதியில் உள்ள மாடுகள் ஆடுகள் நாய் மருத்துவ சிகிச்சை நடைபெற்றது. இந்த முகாமில் நாட்டு நல பணித்திட்ட மாணவ மாணவர்கள் மாடுகள் வளர்க்கும் வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை ஊசி போடுதல், மடிவீக்க நோய்களுக்கான மருந்து, தீவனபுல், தாதுஉப்பு கலவை முதலிவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருவாரூர் மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம், பேரளம் பேரூராட்சி தலைவர் கீதா நாகராஜன், நாட்டுநல பணிதிட்ட அலுவலர் பாரி, பேரளம் பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன், இஞ்சிக்குடி பள்ளி தலைமை ஆசிரியர் காசிராஜா மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட நாட்டுநலபணிதிட்ட மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டர்.
- அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட பார்வையிட்டர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தற்காலிகமாக இயங்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அலுவலகத்தில் இருந்த தன்பதிவேடு, வருகை பதிவேடு, ரொக்கப் பதிவேடு, வைப்புத் தொகை, இருப்பு பதிவேடு, உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அங்கிருந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை கூறினார்.
இந்த ஆய்வில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கமலராஜன், சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- விவசாயிகள் நெல் பயிர்களுக்கு வெற்றிலை, வாழைப்பழம் பூ உள்ளிட்ட பொருட்களை வைத்து படைத்து தீபாரணை காண்பித்து சூரியனுக்கு வழிபாடு செய்தனர்.
- விவசாயிகள் அரிவாளால் அறுவடை செய்த பின்னர் இயந்திர அறுவடை எந்திரம் மூலம் பணியை தொடங்கினர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாகுபடி தொடங்கிய நாளிலிருந்து பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விவசாயிகள் சந்தித்து அதிலிருந்து மீண்டு தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே செம்பியம்மலை பகுதியில் விவசாயிகள் நெல் பயிர்களுக்கு வெற்றிலை நிஜாம் வாழைப்பழம் பூ உள்ளிட்ட பொருட்களை வைத்து படைத்து தீபாரணை காண்பித்து சூரியனுக்கு வழிபாடு செய்த பின்னர் விவசாயியில் அறிவாளால் அறுவடை செய்த பின்னர்.
இயந்திர அறுவடை பணி களை தொடங்கினர்.
ஒரு ஏக்கருக்கு 30 மூட்டை நெல் மணிகள் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து நன்னிலம் திருக்கண்டீஸ்வரம் சன்னாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அறுவடை இயந்திரங்கள் அரசு வேளாண்மை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் வாடகையை அரசு நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு தடையில்லாமல் அறுவடை செய்வதற்கு அறுவடை இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.
- திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
- இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் கீழ விடயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 60) விவசாயி.
சம்பவத்தன்று இவர் திருச்சேறையில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார்.
பின்னர் நடந்து வந்தபோது இஞ்சிகொல்லை குடமுருட்டி ஆறு சட்ரஸ் அருகே ஆற்றில் குடிபோதையில் தவறி கீழே விழுந்தார்.
இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடம் ஆய்வு.
- பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி குறித்து கேட்டறிந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் நான்கு புறமுள்ள நடைப்பாதைகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடத்தையும், மேலும், தர்காவிற்கு வரும் பக்தர்களின் பயன்பா ட்டிற்காக உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்தும், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி குறித்தும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட சிறுபான்மையினர் அலுவலர் பாலசந்தர், தாசில்தார் மலர்கொடி மற்றும் தர்கா டிரஸ்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இதில் தர்கா கமிட்டி சார்பில் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், எஸ்.பி.டி. ஐ. தலைவர் பகுருதீன் ஆகியோர் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.
- அவ்வழியாக சென்றவர்கள் அட்டை பெட்டிகள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளை.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளை ேபானது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பலம் அருகே அரசுக்கு சொந்த மான டாஸ்மாக் கடை உள்ளது.
இந்த கடையில் பணி புரியும் ஊழியர்கள் நேற்று இரவு விற்பனை நேரம் முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடைப்பதையும், அதன் அருகே அட்டை பெட்டிகள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறிந்தார்.
- காலதாமதமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள ரேசன்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்கள் மற்றும் மின் எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ரேசன் கடையில் உள்ள அரிசி, கோதுமை, உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் விவரங்களை கேட்டறி ந்தார்.
தொடர்ந்து, பணியாளர்க ளிடம் காலதாம தமின்றி பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவி ட்டார்.
ஆய்வின்போது மன்னா ர்குடி கோட்டா ட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மாணவர்கள் ஆர்வத்தோடு அச்சோதனைகளை செய்து பார்த்தனர்.
- கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிர் கணக்கு கொடுக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் அருளானந்தம், துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வானவில் மன்ற ஒன்றிய தன்னார்வலர் லாவண்யா, காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதற்கும், காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும் என்பதற்கும் பல எளிய சோதனைகளை மாணவர்களிடையே செய்து காட்டினார்.
அப்போது மாணவர்கள் ஆர்வத்தோடு அச்சோதனைகளை செய்து பார்த்தனர்.
மேலும், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிர் கணக்கு கொடுக்கப்பட்டது. வானவில் மன்ற தன்னார்வ லரோடு மாணவர்கள் உற்சாக த்தோடும், ஆர்வத்தோடும் கலந்துரையாடினர்.
தன்னார்வலர் செய்து காட்டியவை அனைத்தும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் உமாராணி அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.
- சந்தேகத்தின் பேரில் நி்ன்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை.
- அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் நி்ன்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பேரளம் அருகே உள்ள துலார் காலனி தெருவை சேர்ந்த மாதவன் (வயது50) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றினர்.
- 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவார பணி மேற்கொண்டு கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
உழவார பணியை கோவில் செயல் அலுவலர் விமலா தொடங்கி வைத்தார்.
இதில் திட்ட அலுவலர் மற்றும் முதுகலை ஆசிரியை ராஜகுமாரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியை திவ்யா, சர்வாலயா பணிக்குழு அமைப்பு செயலாளர் எடையூர் மணிமாறன், செயலாளர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் துரை.ராயப்பன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வை சர்வாலய உழவாரப்பணி குழு ஒருங்கிணைத்தது.Cultivation work in Piravi Darshaeeswarar temple
- சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை கைது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்துறைப்பூண்டி அருகே அருகே சாராயம் விற்ற நந்திமாங்குடி பகுதியை சேர்ந்த செல்வராஜ்(வயது58), பிஞ்சியூர் பகுதியில் சாராயம் விற்ற செல்லத்துரை(48) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.






