என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடை பெற்றது.
    • வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வடகிழக்கு பருவமழை திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான இந்த வடுவூர் ஏரிக்கு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இருக்கும்.

    முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரத்திலும் பறவைகள் சரணாலயம் உள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை பகுதியில் தொடங்கும் அலையாத்திக்காடு ஆசியாவிலேயே பெரிய மாங்குரோவ் காடாக உள்ளது. இந்த மூன்று இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி பறவைகள் வரக்கூடிய அனைத்து நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு வனத்துறை சார்பில் 2 கட்டமாக நடைபெறும்.

    அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் முதற்கட்டமாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது.

    வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அறிவொழி, துணை கலெக்டர் கீர்த்தனாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 102 இனங்கள் காணப்பட்டது பறவை ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.முதற்கட்ட கணக்கெடுப்பில் வடுவூர் ஏரி, முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் உள்பட 20 நீர்நிலைகளில் 102 பறவை இனங்கள் மாவட்டம் முழுவதும் காணப்பட்டது.

    நத்தை கொத்தி நாரை, சிறிய உள்ளான், வெள்ளை அரிவாள் மூக்கன், நாம கோழி, நெடுங்கால் உள்ளான், நீர் காகம், ஐரோப்பா கரண்டிவாயன், ஆலா, மடையான் ஆகிய இனங்களில் ஒவ்வொன்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தங்கி இருப்பது தெரிய வந்தது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் நீர் நிலைகளில் தங்கி உள்ளது. ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2-ம் கட்ட கணக்கெடுக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

    • அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    நீடாமங்கலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அரவைக்காக 2,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை முன்னிட்டு நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது.

    • சிறந்த சேவையை பாராட்டி திருவாரூரில் நடந்த குடியரசு தின விழாவில் பாராட்டு.
    • சுதந்திர ்போராட்ட தியாகி ஜாம்பவானோடை நாராயணசாமி தேவரின் பேத்தி.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் ரஞ்சனி பிரியா. இவரது சிறந்த சேவையை பாராட்டி திருவாரூரில் நடந்த குடியரசுதின விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் சிறந்த மருத்துவருக்கான பாராட்டு சான்றிதழை ரஞ்சனி பிரியாவிடம் வழங்கினார்.

    விருது பெற்ற ரஞ்சனி பிரியா, சுதந்திரப ்போராட்ட தியாகி ஜாம்பவானோடை நாராயணசாமி தேவரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதியோர் உதவி தொகை ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட 20-வது மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மண்ணை சாலையில் அமைந்துள்ள சீனிவாசராவ் நினைவிடத்திலிருந்து சுடர் ஒளி ஏற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றி மாநாட்டை தொடங்கினர்.

    மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். இதில் விவசாயத் தொழிலாளிக்கு தனித்துறையை உருவாக்கிட வேண்டும், முதியோர் உதவித் தொகை ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த மாநாட்டில் அமிர்தலிங்கம் மாநில பொதுச் செயலாளர், சங்கர் மாநில பொருளாளர், குமாரராஜா மாவட்ட செயலாளர், கந்தசாமி மாவட்ட துணைத்தலைவர், பாலைய்யா மாவட்ட பொருளாளர், லிங்கம் மாவட்ட துணை செயலாளர், மணியன் மாவட்ட துணை செயலாளர், மாரியம்மாள் மாநிலக்குழு, மணி மாவட்டத் துணைத் தலைவர், ரவி ஒன்றிய செயலாளர், சுப்பிரமணியன் நகர செயலாளர், ஜீவானந்தம் ஒன்றிய தலைவர், கார்த்தி நகர தலைவர், மாநில மாவட்ட நகர ஒன்றிய குழு உறுப்பினர்கள் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார்.
    • முகாமில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை வட்டார கால்நடைதுறை மருத்துவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முத்துப்பேட்டை கால்நடை மருந்தக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி ராஷ்டிரிய கிருஷிவிகாஸ் யோஜனா 2022-23-ம் ஆண்டு திட்டம் சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (29-ந்தேதி) நடைபெறுகிறது.

    முகாமை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைக்கிறார். இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார், ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா, துணைத்தலைவர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதில் பொதுமக்கள், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேத மந்திரம் முழங்க சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
    • 91 வகையான புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவலஞ்சுழி அடுத்த தகரவெளியில் உள்ள முஸ்தகலா செல்லப்பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக, விழாவை முன்னிட்டு நடந்த மூன்று கால யாகசாலை பூஜையில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

    பின்னர், 91 வகையான புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் கோவில் நிர்வாகிகள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.
    • 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    திருவாரூர்:

    இந்திய குடியரசின் 74-வது தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் உமாபிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் இரு பெண் குழந்தைகள் பாது காப்பு திட்டத்தின் கீழ் 53 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நலத்திட்ட உதவிகளை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    மேலும் ஒன்றியக்குழுத் தலைவர் உமாபிரியா தலைமையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சத்தியே ந்திரன், நாகூரான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஒன்றியத்திற்குட்பட்ட 44 ஊராட்சிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு கிராமசபை கூட்டங்களும் நடைபெற்றது.

    • பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த பெண்ணை போலீசை கைது செய்தனர்.
    • 110 லிட்டர் வெளிமாநில சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது போலீசாருக்கு அரசவனங்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

    இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த தோப்பு தெருவை சேர்ந்த கலைச்செல்வி (வயது 43) என்ற பெண்ணை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் வெளி மாநில சாராயத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.
    • தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மைய கட்டிடம், மருத்துவ மாணவர் மன்றம் நவீன சமையலறை கூடம் ஆகியவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்விற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது, பான் மசாலா, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.

    இப்போது அடிப்படை பணிகளை தொடங்கினாலும் கட்டுமான பணிகளை தொடங்க 6 மாதம் ஆகும்.

    மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கிய அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தொடங்கப்பட்ட பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.

    மாவட்டத்திற்கு ஒரு அரசு செவிலியர் கல்லூரி என்ற கொள்கை முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கல்லூரி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே வேலங்குடி ஊராட்சியில் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும்.

    இதன்மூலம் கிராம ங்களின் வளர்ச்சிக்கு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். வேலங்குடி ஊராட்சியில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு மற்றும் இதர தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பெண் குழந்தை காப்போம் ஆகிய உறுதிமொழிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் அனைவரும் எடுத்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றி யக்குழுத்தலைவர் புலிவலம் தேவா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திட்ட இயக்குநர் மகளிர்திட்டம் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின்செல்வன், வேளாண்மை இணை இயக்குநர் ஆசீர் கனகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    • வருகிற 3-ந்தேதி கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே எண்கண் என்ற ஊரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிர–மணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா கொடி ஏற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெறும். வருகிற 4-ந் தேதி தைப்பூசத் திருநாள் நடைபெறுவதால் கோவிலில் 30 அடி உயரம் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    முன்னதாக சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் வந்து கோவிலின் நான்கு பிரகாரங்களையும் சுற்றி வந்து பத்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

    தைப்பூசத் திருவிழா 13 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    பிப்ரவரி 7-ந்தேதி முடிவடைகிறது.

    வருகிற 3-ந்தேதி கோவில் தேரோட்டமும், 4-ந்தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெறுகிறது.

    • மாணவியிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
    • வீரபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட எடையூர் காவல் சரகம், மீனம்ப நல்லூர் கடைவீதியை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந் நிலையில், இந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி புகைப்படம் எடுத்து மாணவியை மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன மாணவி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் எடையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்திய காட்டி மிரட்டியது திருத்துறைப்பூண்டி சீலத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியன் (வயது 24) என்பது தெரிய வந்தது.

    உடனடியாக போலீசார் வீரபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×