என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்கண் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம்
    X

    சுப்பிரமணியசாமி கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    எண்கண் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

    • கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    • வருகிற 3-ந்தேதி கோவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே எண்கண் என்ற ஊரில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிர–மணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா கொடி ஏற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெறும். வருகிற 4-ந் தேதி தைப்பூசத் திருநாள் நடைபெறுவதால் கோவிலில் 30 அடி உயரம் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    முன்னதாக சிங்காரவேலர் வள்ளி தெய்வானையுடன் வந்து கோவிலின் நான்கு பிரகாரங்களையும் சுற்றி வந்து பத்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்த கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

    தைப்பூசத் திருவிழா 13 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    பிப்ரவரி 7-ந்தேதி முடிவடைகிறது.

    வருகிற 3-ந்தேதி கோவில் தேரோட்டமும், 4-ந்தேதி தைப்பூச திருவிழாவும் நடைபெறுகிறது.

    Next Story
    ×