என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது
    X

    மாணவியை மிரட்டிய வாலிபர் போக்சோவில் கைது

    • மாணவியிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
    • வீரபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட எடையூர் காவல் சரகம், மீனம்ப நல்லூர் கடைவீதியை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந் நிலையில், இந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி புகைப்படம் எடுத்து மாணவியை மிரட்டி உள்ளார்.

    இதனால் பயந்து போன மாணவி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் எடையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்திய காட்டி மிரட்டியது திருத்துறைப்பூண்டி சீலத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியன் (வயது 24) என்பது தெரிய வந்தது.

    உடனடியாக போலீசார் வீரபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×