என் மலர்
திருவாரூர்
- 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கபட்டன.
மன்னார்குடி:
மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னனுத்துறை, மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை இணைந்து நடத்திய பொறியியல் கருத்தரங்கம் இ-வொர்டக்ஸ் 2023 நடைபெற்றது.
இதில் பட்டுக்கோட்டை ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி டீன் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஏ.ஆர்.ஜெ கல்வி குழுமத் துணை தலைவர் மற்றும் தாளாளர் ஜீவகன் அய்யாநாதன் தலைமை தாங்கினார்.
ஏ.ஆர்.ஜெ கல்விக்குழும தலைவர் ராஜகுமாரி அய்யாநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன் பாராட்டுரை வழங்கினார்.
வாண்டையார் பொறியியல் கல்லூரி டீன் மற்றும் பேராசிரியர் டாக்டர் சரஸ்வதி, ஏ.வி.சி பொறியியல் கல்லூரி பேராசிரியர் டாக்டர் தனசேகர் நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றார்.
முன்னதாக மின் மற்றும் மின்னனு துறை தலைவரும் உதவி பேராசிரியருமான பவித்ராதேவி வரவேற்புரை வழங்கினார்.
உதவி பேராசிரியர் உமாசத்யா சிறப்பு விருந்தினரை அறிமுகப்–படுத்தினார்.
நிகழ்ச்சியின் நினைவாக கருத்தரங்கம் பற்றிய புத்தகம் ஒன்றினை மாணவர்களின் கலை ஆற்றல்களை நிறைத்து மின்னனு மற்றும் தகவல் தொடர்புதுறை உதவி பேராசிரியர் மற்றும் துறை தலைவர் அகல்யா அனைத்து விருந்தினர்களுடன் இணைந்து வெளியிட்டனர்.
இந்த கருத்தரங்கில் 12 கல்லூரிகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கபட்டன.
முடிவில் மின்னனு மற்றும் தகவல் தொடர்பு துறை உதவி பேராசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.
- கண்தானம் பெறப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் வசித்து வந்த ரவிச்சந்திரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் மூலம் கண்தானம் பெறப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கண் தானம் வழங்கிய குடும்பத்தினருக்கு பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி, ராய் டிரஸ்ட் சார்பில் கண்தான சான்றிதழை குடும்பத்தினரிடம் வழங்கினார்.
இதில் கருணாநிதி, ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன், சென்னை ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் கூறுகையில்:-
அனைவரும் மண்ணுக்கு போகும் கண்ணை தானம் செய்து அடுத்தவரின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்றார்.
தொடர்ந்து, அனைவரும் கண்தான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- எந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
- பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரம் சிமிலி கிராமத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மாநில அளவிலான பருத்தி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தான பயிற்சி நடைபெற்றது.
வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து பயிற்சியின் பருத்தி சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை வெளியீட்டும் பருத்தி இடுபொருள் கண்காட்சியை துவக்கி வைத்து திருவாருர் மாவட்ட இணை இயக்குனர் லெட்சுமிகாந்தன் பேசுகையில்:-
பருத்தி நமது மாவட்டத்தில் முதன்மை பணப்பயிராக பயிரிடப்படுகிறது.
இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தினை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரகம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை போன்ற தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்றார்.
வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்) ஏழுமலை பருத்தி சாகுபடி செய்யக்கூடிய வயல்களில் அதற்கு முன்னதாக மண் மாதிரி சேகரம் மற்றும் நீர் மாதிரி சேகரம் எவ்வாறு செய்தல் வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார்.
வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பயிற்சி அளிக்கையில் பருத்திப்பயிரில் மண் பரிசோதனைக்கு ஏற்ப தலை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும் என்றும், உர அளவு, உரம் இடுதல் மற்றும் உர மேலாண்மை போன்ற தொழில்நுட்ப கருத்துகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) ஹேமா ஹப்சிபா நிர்மலா பேசுகையில்,பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக வருகிற 31-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக காப்பீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் .மேலும் ஜெயப்பிரகாஷ் வேளாண்மை உதவி இயக்குனர் (விதை சான்று) பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் அருள்செல்வி, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்த்தில் ஸ்பிரேயர் பருத்தி நுன்னுட்டம், தார்ப்பாய் போன்ற பருத்திக்குத் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இப்பபயிற்சி முகாமில் சிமிலி ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்ற மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- படுகாயம் அடைந்து முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அரசக்குளத்தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. இவருடைய மகன் அப்துல் ரஹ்மான் (வயது 28).
இவர் தான் வாங்கிய புதிய மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்வதற்காக தனது நண்பரான, குண்டாங்குளத் தெருவை சேர்ந்த சேக்தாவுது மகன் செய்யது இப்ராகிம்(27) என்பவருடன் திருத்துறைப்பூண்டி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
ஆலங்காடு பைபாஸ் அருகே சென்றபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி சென்ற மினிலாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி சென்ற அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிர் இழந்தார்.
செய்யது இப்ராகிம் படுகாயம் அடைந்து முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மினிலாரி டிரைவர் சம்பவஇடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.
- ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.
நீடாமங்கலம்:
வலங்கைமானில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் இளங்கோவன் கூட்டத்தின் பொருள் குறித்து விளக்கி பேசினார்.
மாவட்டத் தலைவர் மணி, மாவட்ட மகளிர் அணி சத்தியபாமா, வட்டார மகளிர் அணி செயலாளர் சத்தியசீலா, மாவட்டத் துணைத் தலைவர் தர்மபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் வட்டார பொருளாளர்கள் கணேசன், சங்கராஜ், மாவட்ட பிரதிநிதி தண்டபாணி, கண்ணன், மைய செயலாளர்கள் இரவிசங்கர், லூர்து சேவியர், செந்தில் குமார், கல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரம் இந்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.
ஐபெட்டோ அண்ணாமலை கோரிக்கைப்படி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.முடிவில் வட்டாரப் பொருளாளர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.
இந்த தீர்மானங்களில் படி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.
- அலுவலகத்திலுள்ள கோப்புகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் உள்ள சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு நாகப்பட்டினம் சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு இணை கமிஷனர் செந்தில் நாதன் தலைமை தாங்கினார்.
முன்னதாக துணை சூப்பிரண்டு இன்னாசி ஆரோக்கியராஜ் அனை வரையும்வரவேற்றார்.
கட்டிடத்தை திருச்சி மண்டல சுங்க இலாகா ஆணையர் அனில் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து சுங்க இலாகா ஆணையர் அனில் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
பின்னர், அலுவலகம் உள்ளே சென்று அங்கிருந்தகோப்பு களை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.
இதில் சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியா ளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மன்னார்குடி பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
- அறுந்து கிடந்த மின்கம்பியை மாதவன் மதித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த மேலவாசல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 27).
நேற்று மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில் மழை பெய்த போது வீட்டில் இருந்த மாதவன், மழை விட்ட பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.
இதை கவனிக்காத மாதவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.
அப்போது மாதவன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, விழாவில் தங்க சூரிய பிரபை 20-ந்தேதியும், தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதில் நவநீத கோலத்தில் காட்சியளித்த ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணெய் அடித்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா நடந்தது.
- தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து வழிபட்டனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந்தேதி முதல் காப்பு கட்டுதலும், 19-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடந்தது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பாடைக்காவடி திருவிழா இன்று நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பாடைக்காவடி எடுத்து வழிபட்டனர். இதுதவிர அலகுகாவடி, விலாவுக்காவடி. பால்காவடி, அங்கபிரதஷ்ணம் என பல காவடிகள் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர்.
- மனவேதனை அடைந்த அஷ்டலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- தகவலறிந்த சுபாசும் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
பேரளம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 25).டிரைவர்.
இவரது மனைவி அஷ்டலட்சுமி (20). இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு சுபாஷ் (விஷம்) எலி பேஸ்ட் உட் கொண்டு தற்கொலைக்கு முயன்று திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி உள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த அஷ்டலட்சுமி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஷ்டலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சுபாஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடலையும் போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர்-மனைவி அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
- தகவல் அறிந்தத ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அருகே வடகார வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40).
கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலைக்குச் சென்றபோது மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷ்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடிஅரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- ஏப்ரல் 1 முதல் 2 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது.
- பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நீடாமங்கலம்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை பல்லக்கு திருவிழாவும், ஏப்ரல் 1 முதல் 2 வரை நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, இரவு, பகல் முழுவதும் தஞ்சாவூர், கும்பகோணம், நீடாமங்கலம், குடவாசல், பாபநாசம் மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட சுற்றுப்புற ஊர்களில் இருந்து பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






