search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலங்கைமானில், கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்த ஆசிரியர்கள்
    X

    கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர்.

    வலங்கைமானில், கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்த ஆசிரியர்கள்

    • தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.
    • ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் இளங்கோவன் கூட்டத்தின் பொருள் குறித்து விளக்கி பேசினார்.

    மாவட்டத் தலைவர் மணி, மாவட்ட மகளிர் அணி சத்தியபாமா, வட்டார மகளிர் அணி செயலாளர் சத்தியசீலா, மாவட்டத் துணைத் தலைவர் தர்மபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் வட்டார பொருளாளர்கள் கணேசன், சங்கராஜ், மாவட்ட பிரதிநிதி தண்டபாணி, கண்ணன், மைய செயலாளர்கள் இரவிசங்கர், லூர்து சேவியர், செந்தில் குமார், கல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரம் இந்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.

    ஐபெட்டோ அண்ணாமலை கோரிக்கைப்படி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.முடிவில் வட்டாரப் பொருளாளர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.

    இந்த தீர்மானங்களில் படி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.

    Next Story
    ×