என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    • விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு லிட்டில் பிளவர் கல்வி குழுமத்தின் தலைவர் மரியசூசை தலைமை தாங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சஹானா உமர் செய்திருந்தார்.

    • களக்காடு பஸ் நிலையம் கீழத்தெருவில் வாறுகால் பணிக்காக குழி தோண்டப்பட்டது.
    • பொன்ராஜ் உள்ளிட்டோர் வாறுகால் அமைக்கும் பணியை தடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு பஸ் நிலையம் கீழத்தெருவில் கழிவுநீர் செல்ல வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து வாறுகால் அமைக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பன்னீர்தாஸ் (வயது53), மேலப்பத்தையை சேர்ந்த ஜெயக்குமார் (40), சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த பொன்ராஜ் (40) ஆகியோர் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை கற்களை போட்டு அடைத்து, வாறுகால் அமைக்கும் பணியை தடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த களக்காடு நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலரான அந்தோணிசாமி மனைவி சித்ரா (38) தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சித்ராவுக்கு, பன்னீர்தாஸ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பன்னீர்தாஸ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • ஜீவா அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • மனம் உடைந்த செல்வி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    களக்காடு:

    களக்காடு, கக்கன்நகர், வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஜீவா. தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது38). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 1 ஆண் குழந்தையும், 1 பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜீவாவிற்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்றும் மது அருந்திய போதையில் வீட்டிற்கு வந்த ஜீவா, மனைவி செல்வியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனம் உடைந்த செல்வி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி செல்வியின் தந்தை கல்லிடைகுறிச்சி, காட்டுமன்னார் கோவிலை ராமையா (72) களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினார்.

    • ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
    • விபத்தில் இசக்கிமுத்து, முத்துச்செல்வன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    பணகுடி:

    பணகுடி அருகே தளவாய் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஆறுமுகம் தளவாய்புரத்தில் இருந்து பணகுடிக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    பணகுடி வங்கி அருகே வரும்போது எதிரில் ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (24), அவரது நண்பர் முத்து செல்வம் (23) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பணகுடிக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது. இதில் ஆறுமுகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இசக்கிமுத்து, முத்துச்செல்வன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாமிநாதன் என்ற செந்தில் அவருடைய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
    • செல்வகுமார்,சாமிநாதன் என்ற செந்திலை அவதூறாக பேசி மணிகண்டன் தாக்கினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் கீழரத வீதியை சேர்ந்த சாமிநாதன் என்ற செந்தில் (வயது40) என்பவர் அவருடைய நண்பருடன் நேற்று வள்ளியூர் சிவன் கோவில் தெருவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(31) என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து வள்ளியூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தடுக்க வந்த போது அவரையும், சாமிநாதன் என்ற செந்திலையும் மணி கண்டன் அவதூறாக பேசி கண்ணாடி பாட்டிலால் தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சாமிநாதன் என்ற செந்தில் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    • போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ்குமார் (வயது41). கட்டிட தொழிலாளி.

    இவர் நெல்லை மாவட்டம் மேல திடியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில் ஜூலியஸ்குமார் இன்று காலை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலியஸ்குமாருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்கள் 3 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. அப்போது கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் கிடந்தது. அதனை மோப்ப நாய் கவ்வி எடுத்தது.

    அதனை போலீசார் கைரேகை நிபுணர்களிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் நெல்லை-அம்பை சாலையில் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் சந்தேகப்படும் படியான யாருடைய நடமாட்டமும் இல்லை. எனவே கொலையாளிகள் கல்லூரியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    அதன்பேரில் கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சக ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ்குமார் (வயது41). கட்டிட தொழிலாளி. இவர் நெல்லை மாவட்டம் மேல திடியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டிட பணிக்காக அங்கே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவருடன் மேலும் சில தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில் ஜூலியஸ்குமார் இன்று காலை அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜூலியஸ்குமாருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுவாக தீபாவளி தினத்தன்று அதிகாலையிலே அனைவரும் எழுந்து எண்ணை தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்த பின்னர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்வார்கள். பின்னர் வீடுகளில் பாரம்பரிய பலகாரங்கள் செய்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள்

    இதனால் நெல்லையில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இன்று தீபாவளிக்கான இறுதி நாள் விற்பனை என்பதால் நெல்லையில் தீபாவளி பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    டவுன் ரதவீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு ரதவீதியில் உள்ள ஜவுளிகடைகளில் புத்தாடைகள் வாங்க பெரும்பாலானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு சாலையின் இருபுறமும் உள்ள பிளாட்பார கடைகளில் பொதுமக்கள் ஆடைகள் எடுப்பதற்கு அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வண்ணார்பேட்டையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. பிரதான சாலைகளில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. நெல்லை சந்திப்பில் இருந்து வண்ணார்பேட்டைக்கு வாகனங்களில் செல்வதற்கு சுமார் அரை மணி நேரமாகிறது.

    இதேபோன்று பாளை சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களிலும், மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு பாரம்பரிய பலகாரங்கள் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் சென்று சீடை, முறுக்கு, அதிரசம், முந்திரி கொத்து உள்ளிட்ட பலகாரங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுதவிர வீட்டு உபயோக பொருட்களான டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷன் உள்ளிட்டவைகள் வாங்குவதற்கும் பாளை முருகன்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால் வண்ணார்பேட்டை சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    இதற்கிடையே கூட்ட நெரிசலில் நகை, பணம் திருடு போவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் ஆதார்ஷ் பசேரா, அனிதா, சரவணகுமார் ஆகியோரின் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் 600 போலீசார் மற்றும் பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1,000 போலீசாரும், வள்ளியூர், களக்காடு, அம்பை, திசையன்விளை உள்ளிட்ட புறநகர் மாவட்ட பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 1,500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பா லம், முருகன்குறிச்சி சாலை, சமாதானபுரம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து ஜீப்புகள், மோட்டார் சைக்கிள்களிலும் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான டவுன் ரதவீதி, வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் ஆகிய இடங்களில் தற்காலிக உயர்கோபுரம் அமைத்து, அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    டவுன் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட காமிராக்களும் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த சில நாட்களாக இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மூலம் வெளியூர்களில் இருந்து ஏராள மானவர்கள் நெல்லைக்கு வந்தனர். இன்று காலையிலும் ஏராளமான பயணிகள் குடும்ப த்தினருடன் வந்திறங்கினர். அவர்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ரெயில்க ளில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த சிறப்பு பஸ்கள் மூலமாக ஏராளமானவர்கள் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தூத்துக்குடி, தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் வாடகை கார், ஆட்டோ போன்றவற்றிலும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதேபோன்று தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரத்திலும் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
    • திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல நேற்று வனத்துறையினர் தடை விதித்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலைநம்பி கோவில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்ய ப்பட்ட சிறப்புமிக்க தாகும்.

    பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம். மேலும் தமிழ் மாத முதல் சனிக்கிழமை மற்றும் கடைசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. எனவே மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டப்படி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இதையடுத்து திருக்குறு ங்குடி மலையில் உள்ள திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நேற்று வனத்துறையினர் தடை விதித்தனர். இதுபோல ஆற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே இன்று மழை இல்லாததால் ஆற்றில் கரை புரண்ட வெள்ளம் தணிந்தது.

    இதையடுத்து திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்க ப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது. இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மழை மீண்டும் பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • நெல்லையில் வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்து விற்பனையை தொடங்கியுள்ளனர்.
    • பம்பரம் வெடி, ஒரே பூச்சட்டியில் 5 நிறங்கள் வரும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகைக்கு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் பட்டாசு விற்பனை விறு விறுப்படைந்து ள்ளது.

    தற்காலிக கடைகள்

    தமிழகத்தின் பட்டாசு நகரமான சிவகாசிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மொத்த வியாபாரிகள் நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கி நெல்லைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தற்காலிக கடைகளை அமைத்து தங்களது விற்பனையை தொடங்கியுள்ளனர். நவீன காலத்தில் நாம் உடுத்தும் உடைகளில் புதுமை இருப்பதைப்போல பட்டாசுகளிலும்  ஆண்டுதோறும் புதுப்புது ரகங்கள் பல்வேறு விலைகளில் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் மத்தாப்பு, தரைச்சக்கரம், சாட்டை வகைகள், பேன்சி பட்டாசுகள், 28 வாலா முதல் 3,000 வாலா வரையிலான சரவெடிகள், புல்லட், ராக்கெட்டுகள், அணுகுண்டுகள், குருவி வெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், டிரிபிள் ஷாட் உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளன.

    புதுரக பட்டாசுகள்

    மேலும் பம்பரம் வெடி, ஒரே பூச்சட்டியில் 5 நிறங்கள் வரும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஆண்டு கிரிக்கெட் மட்டை-பந்து வெடிகள், லெமன் சோடா வெடிகள், மயில் வெடிகள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர ரூபாய் நோட்டு வெடி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வெடியை பற்றவைத்த பின் அது வெடிக்கும்போது ரூபாய் நோட்டுகள் சிதறுவது போல் தயாரிக்கப்பட்டு ள்ளது.

    இந்த ஆண்டு புதிய வரவாக ஆங்கில சேனல்களின் பெயர்களில் குழந்தைகளுக்கான வெடிகள் வந்துள்ளன. சோட்டா பீம், காளியா, லாலிபாப் மிட்டாய் போன்ற வெடிகளின் வரவால் குழந்தைகள் குதூகலத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    நெல்லை மாநகரில் டவுன் பகுதியில் தொடங்கி பெரும்பாலான இடங்களில் சாலையோர கடைகளும் போடப்பட்டுள்ளன. டவுன், பேட்டை, வண்ணார்பே ட்டை, சந்திப்பு, பாளை, சமாதான புரம் பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலையம் பகுதிகளிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரிகள் பட்டாசு விற்பனையை தொடங்கி யுள்ளனர். நாளை தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை விறுவிறுப்ப டைந்துள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரும்பாலான பட்டாசுகளின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், ஆனாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவி க்கின்றனர். இதுகுறித்து டவுன் பகுதியை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஒருவா் கூறியதாவது:-

    காகிதம், அலுமினிய பவுடா் போன்ற மூலப் பொருள்கள் விலையேற்றம், போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் பட்டாசுகளின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. பட்டாசு ரகங்களில் பாக்ஸ்கள் அதிகம் விற்பனையாகின்றன. ரூ. 250, 350, 500, 1,000, 1,500 என பல்வேறு விலைகளில் பாக்ஸ்கள் உள்ளன. பல வண்ண ஒளிதரும் பட்டாசுகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனா்.

    வானில் பல்வேறு வண்ணங்களில் வெடித்து சிதறும் புதிய ரக வானவெடி தொகுப்புகள் ரூ. 1,000 முதல் ரூ. 15,000 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. 10 முதல் 30 நிமிடங்கள் வரை தொடா்ச்சியாக ஒளி தரும் பட்டாசுகளை இளம் வயதினர் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். சில வெடிகள் அரை மணி நேரம் வெடிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
    • ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களுக்கு பண்டிகைகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதுபோல தீபாவளிப் பண்டிகையும் இந்தியாவில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அறியாமையின் மீதான அறிவையும் குறிக்கிறது. தீபாவளி அன்று நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது, புத்தாடைகள் அணிவது நம் மனதிற்கு ஒரு மகிழ்ச்சியையும், குடும்பத்தினருடனும், உறவினருடனும் நம் அன்பையும் பாசத்தையும் புதுப்பித்து கொள்ள நல்வாய்ப்பாக உள்ளது.

    ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களுக்கு இது போன்ற பண்டிகைகள் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் இந்நாளில் அக்கம், பக்கத்தினருடன் அன்பையும், மரியாதையை யும், வலுவான பிணைப்பு களையும் குறிக்கும் வகையில், பரிசுப்பரிமாற்றங்கள் மற்றும் இனிப்புகளையும், பலகாரங்களையும் பரிமாறிக் கொண்டு வருகிறோம்.

    நம் வாழ்வில் இருள் நீங்கி ஒளி உண்டாகுவதை குறிக்கும் விதமாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காற்று மாசுபா டுகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பது என்பது நம் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சூழ்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணமாக பசுமை பட்டாசுகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

    தீபாவளி என்பது வெறும் பண்டிகை அல்ல. இது நம் கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும் பின்னி பிணைந்துள்ளது. இந்நன்னாளில் அனைவரது இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்கி, உங்களது ஆசைகளும், கனவுகளும் நிறைவேற இந்த நாள் இனிய நாளாக அமைய என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வெள்ளங்குளி கிராமத்தில் வயல் தின விழா நிகழ்ச்சி நடை பெற்றது.
    • 25 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வேளாண்மை இணை இயக்குநர் வழங்கினார்.

    அம்பை:

    வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) முகமையின் கீழ் அம்பை அருகே உள்ள வெள்ளங்குளி கிராமத்தில் நெற்பயிரில் வேளாண் சுற்றுச் சூழல் பகுப்பாய்வு பண்ணைப்பள்ளி மற்றும் வயல் தின விழா நிகழ்ச்சி நடை பெற்றது. நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகானந்தம் கலந்து கொண்டார்.

    வெள்ளங்குளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் பேசுகையில் நம் ஊராட்சியில் உள்ள அனைத்து விவசாயிகளும் வேளாண்மைத்துறை திட்டங்களை கேட்டு தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். முன்னதாக அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் வரவேற்று பேசினார். ஆறுகட்டமாக நடைபெற்ற பண்ணை பள்ளியில் விதை முதல் விதை வரை உள்ள அறுவடை தொழில் நுட்பங்களை அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியர்கள் ஆல்வின் மற்றும் ரஜினி மாலா ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.

    முடிவில் 25 விவசாயிகளுக்கு இடுபொருட்களை வேளாண்மை இணை இயக்குநர் வழங்கினார். வேளாண்மை துணை அலுவலர் திவார் பக்கீர் மைதீன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஈழவணி, உதவி வேளாண்மை அலுவார் விஜயலெட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தங்கசரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×