search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கடைகளில் விற்பனை தீவிரம்- சிறுவர்கள், இளைஞர்களை கவர்ந்த புதுரக பட்டாசுகள்
    X

    வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு கடையில் பட்டாசுகளை தேர்வு செய்பவர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை கடைகளில் விற்பனை தீவிரம்- சிறுவர்கள், இளைஞர்களை கவர்ந்த புதுரக பட்டாசுகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லையில் வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்து விற்பனையை தொடங்கியுள்ளனர்.
    • பம்பரம் வெடி, ஒரே பூச்சட்டியில் 5 நிறங்கள் வரும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகைக்கு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லையில் பட்டாசு விற்பனை விறு விறுப்படைந்து ள்ளது.

    தற்காலிக கடைகள்

    தமிழகத்தின் பட்டாசு நகரமான சிவகாசிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மொத்த வியாபாரிகள் நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கி நெல்லைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தற்காலிக கடைகளை அமைத்து தங்களது விற்பனையை தொடங்கியுள்ளனர். நவீன காலத்தில் நாம் உடுத்தும் உடைகளில் புதுமை இருப்பதைப்போல பட்டாசுகளிலும் ஆண்டுதோறும் புதுப்புது ரகங்கள் பல்வேறு விலைகளில் கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் மத்தாப்பு, தரைச்சக்கரம், சாட்டை வகைகள், பேன்சி பட்டாசுகள், 28 வாலா முதல் 3,000 வாலா வரையிலான சரவெடிகள், புல்லட், ராக்கெட்டுகள், அணுகுண்டுகள், குருவி வெடி, லட்சுமி வெடி, டபுள் ஷாட், டிரிபிள் ஷாட் உள்ளிட்டவை விற்பனைக்கு வந்துள்ளன.

    புதுரக பட்டாசுகள்

    மேலும் பம்பரம் வெடி, ஒரே பூச்சட்டியில் 5 நிறங்கள் வரும் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஆண்டு கிரிக்கெட் மட்டை-பந்து வெடிகள், லெமன் சோடா வெடிகள், மயில் வெடிகள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர ரூபாய் நோட்டு வெடி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வெடியை பற்றவைத்த பின் அது வெடிக்கும்போது ரூபாய் நோட்டுகள் சிதறுவது போல் தயாரிக்கப்பட்டு ள்ளது.

    இந்த ஆண்டு புதிய வரவாக ஆங்கில சேனல்களின் பெயர்களில் குழந்தைகளுக்கான வெடிகள் வந்துள்ளன. சோட்டா பீம், காளியா, லாலிபாப் மிட்டாய் போன்ற வெடிகளின் வரவால் குழந்தைகள் குதூகலத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    நெல்லை மாநகரில் டவுன் பகுதியில் தொடங்கி பெரும்பாலான இடங்களில் சாலையோர கடைகளும் போடப்பட்டுள்ளன. டவுன், பேட்டை, வண்ணார்பே ட்டை, சந்திப்பு, பாளை, சமாதான புரம் பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலையம் பகுதிகளிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரிகள் பட்டாசு விற்பனையை தொடங்கி யுள்ளனர். நாளை தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை விறுவிறுப்ப டைந்துள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரும்பாலான பட்டாசுகளின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், ஆனாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவி க்கின்றனர். இதுகுறித்து டவுன் பகுதியை சேர்ந்த பட்டாசு வியாபாரி ஒருவா் கூறியதாவது:-

    காகிதம், அலுமினிய பவுடா் போன்ற மூலப் பொருள்கள் விலையேற்றம், போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் பட்டாசுகளின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. பட்டாசு ரகங்களில் பாக்ஸ்கள் அதிகம் விற்பனையாகின்றன. ரூ. 250, 350, 500, 1,000, 1,500 என பல்வேறு விலைகளில் பாக்ஸ்கள் உள்ளன. பல வண்ண ஒளிதரும் பட்டாசுகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனா்.

    வானில் பல்வேறு வண்ணங்களில் வெடித்து சிதறும் புதிய ரக வானவெடி தொகுப்புகள் ரூ. 1,000 முதல் ரூ. 15,000 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. 10 முதல் 30 நிமிடங்கள் வரை தொடா்ச்சியாக ஒளி தரும் பட்டாசுகளை இளம் வயதினர் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். சில வெடிகள் அரை மணி நேரம் வெடிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×