பணகுடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்- கூலி தொழிலாளி பலி

ஆறுமுகத்திற்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். விபத்தில் இசக்கிமுத்து, முத்துச்செல்வன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆறுமுகம்
ஆறுமுகம்
Published on

பணகுடி:

பணகுடி அருகே தளவாய் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஆறுமுகம் தளவாய்புரத்தில் இருந்து பணகுடிக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

பணகுடி வங்கி அருகே வரும்போது எதிரில் ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (24), அவரது நண்பர் முத்து செல்வம் (23) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பணகுடிக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது. இதில் ஆறுமுகத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இசக்கிமுத்து, முத்துச்செல்வன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com