நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
Published on

நெல்லை:

நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு லிட்டில் பிளவர் கல்வி குழுமத்தின் தலைவர் மரியசூசை தலைமை தாங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சஹானா உமர் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com