என் மலர்
திருநெல்வேலி
- ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை.
- ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளல்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவில் 2-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
இரவில் சுவாமி, அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி அளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பேச்சுவார்த்தையின் போது கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது இலந்தைகுளம். இதன் அருகில் பாளையங்கோட்டை ரெயில் நிலையம், அறநிலையத்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், அதனருகில் காவலர் குடியிருப்பு, ஆயுதப்படை மைதானம், இலந்தை குளத்திற்கு மேற்கே ராஜேந்திரன் நகர் உள்ளது.
இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இலந்தை குளத்தில் அன்பு நகரில் இருந்து வரும் பாதாள சாக்கடை கழிவுநீர் முழுவதுமாக கலப்பதால் குளம் மாசடைந்து அதிக அளவில் கொசு உற்பத்தி ஆகிறது. இதனால் வைரஸ் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் மாநகராட்சி கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை இலந்தை குளத்தில் கலக்கும் பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் அனுராதா, சங்கர பாண்டி யன், காங்கிரஸ் நிர்வாகிகள் மாரியப்பன், வெள்ளை பாண்டியன், ராஜேந்திரன், கங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து உதவி போலீஸ் கமிஷனர் காளிமுத்து, இன்ஸ்பெக்டர் முருகன், சுகாதார அலுவலர் முருகேசன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- விழாவில் 2,800 பள்ளி மாணவிகளுக்கு விதைபந்து பேனா வழங்கப்பட்டது.
- விதைகள் பந்து பேனாவை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரியும்போது அதிலிருந்து மரம் உருவாகும்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கல்லணை மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு மாணவிகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி 2,800 பள்ளி மாணவிகளுக்கு இயற்கையால் செய்யப்பட்ட விதைபந்து பேனா வழங்கினார்.
இதில் பேசிய துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நமது பாரம்பரிய அகத்தி, வேப்பமரம் போன்ற மரங்களின் இருக்கும் விதைகள் பந்து பேனாவை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எரியும்போது அதிலிருந்து மரம் உருவாகும். பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டு அந்த மரத்தை வளர்க்க வேண்டும். அவ்வாறு மரம் வளர்க்கும் மாணவிகளுக்கு உங்கள் ஆசிரியர், பெருமக்களின் உதவியோடு அதற்கான ஊக்கமும் பரிசும் நான் நிச்சயம் தருவேன் என்று உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் அனார்கலி, பகுதி துணைச் செயலாளர் அப்துல் சுபஹானி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- பாக முகவர்கள் கூட்டத்தை வருகிற 22-ந் தேதிக்குள் முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகாராஜாநகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். ராதாபுரம் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ், அம்பை தொகுதி பொறுப்பாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதற்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கியதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல், நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு பாராட்டு, பாராளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 40 தொகுதிகளையும் வென்று இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைப்பது, பாக முகவர்கள் கூட்டத்தை வருகிற 22-ந் தேதிக்குள் முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் ஜார்ஜ் கோஷல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், வக்கீல் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், போர்வெல் கணேசன், சுடலை கண்ணு, ஜோசப் பெல்சி, நகர செயலாளர் பிரபாகர பாண்டியன், பேரூர் செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தகராறின்போது முத்துசரவணன், இசக்கியை கம்பால் தாக்கினார்.
- காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் போலீஸ் சரகம் பதைக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி (வயது 45). விவசாயி. இவரது மகன் முருகன், அதே ஊரை சேர்ந்த முத்துசரவணனுடன் (23) ஒரே மோட்டார் சைக்கிளில் அடிக்கடி வந்துள்ளார். இது இசக்கிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவர் முத்துசரவணனை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துசரவணன், இசக்கியை கம்பால் தாக்கினார். இதைப்பார்த்த இசக்கியின் மகள் அதனை தடுக்க வந்தார். அவரையும் முத்துசரவணன் கம்பால் தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி விஜய நாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துசரவணனை கைது செய்தனர்.
- மேகலா நாங்குநேரி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார்.
- செல்வராஜ் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் லெட்சுமணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.
களக்காடு:
களக்காடு, ஆற்றாங்கரைதெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மேகலா நாங்குநேரி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார். லெட்சுமணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 11-ந் தேதி லெட்சுமணன் போதையில் வீட்டிற்கு வந்து மனைவி மேகலாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மேகலா தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். லெட்சுமணனும் வீட்டை விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று லெட்சுமணன் களக்காடு தலையணைக்கு செல்லும் வழியில் உள்ள அவரது உறவினர் செல்வராஜ் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லெட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் லெட்சுமணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- ஒரு மாதத்திற்கு முன்பு முகேஷ் என்பவருக்கும், மதன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- சிவா உள்பட 4 பேரும் சேர்ந்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடியை சேர்ந்தவர் ராமன் (வயது 45). விவசாயி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், மதன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கு ராமன் தான் காரணம் என முகேஷ் குடும்பத்தினர் கருதினர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ராமன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகேஷ் (26), அவரது சகோதரர் அஜித் (23), நம்பிராஜன் மகன் பவின் (24), காரியாண்டியை சேர்ந்த சிவா ஆகிய 4 பேரும் சேர்ந்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கினர்.
அதனை தடுக்க வந்த ராமனின் மாமனார் சுப்பிரமணியனையும் அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து ராமன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகேஷ், அஜித் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.
- ராஜீவ்காந்தியின் சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
- சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம், தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி அருகே அருமநல்லூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் உருவச்சிலை சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
மிகுந்த போற்றுதலுக்கு உரிய தலைவர் ராஜீவ்காந்தி. இந்த நாட்டுக்காகவே வாழ்ந்தவர். நம்முடைய தமிழ் மண்ணில்தான் உயிர் துறந்தார்.
அப்படிப்பட்டவரின் உருவ சிலையை சிலர், தீய எண்ணத்தோடு, உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத செயல். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அமரர் ராஜீவ்காந்தியின் உருவ சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
- குடிபோதையில் சக தொழிலாளர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
- போலீசார் ஜூலியஸ் குமாருடன் தங்கியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
நெல்லை:
குமரி மாவட்டம் நெய்யூர் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்தவர் ஜூலியஸ் குமார்(வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் புதிய கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.
கடந்த சில வாரங்களாக நெல்லை அருகே உள்ள திடீயூரில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். இதற்காக சக தொழிலாளர்களுடன் கல்லூரி வளாகத்தில் இருந்த அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று அதிகாலை சக தொழிலாளர்களில் சிலர் பார்த்தபோது அவர் கோடாரி மற்றும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குடிபோதையில் சக தொழிலாளர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் ஜூலியஸ் குமாருடன் தங்கியிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் 2 தொழிலாளர்கள் அங்கு இல்லை. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில், காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த குமரி மாவட்டம் சாமியார்மடத்தை சேர்ந்த சூர்யா(24) மற்றும் திங்கள்சந்தை பகுதி சானல்கரையை சேர்ந்த செல்வன்(33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தீபாவளி அன்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றியதில் ஜூலியஸ் குமாரை வெட்டிக்கொலை செய்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பிசான பருவ சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக மழை இல்லை.
மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் அடித்தது. மூலக்கரைப்பட்டியை சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தில் அம்பையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், நடுக்கல்லூர், சீவலப்பேரி வரையிலும் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் நெல் நடவு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அணையில் தண்ணீர் திறப்பால் குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்து, கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பிசான பருவ சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 96.70 அடியையும், சேர்வலாறு அணை 110 அடியையும் எட்டியுள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 786 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66.80 அடியாக உள்ளது.
இதனால் மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று பாசனம் மூலம் பயன்பெறும் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களிலும் நெல் நடவு ஆயத்த பணிகளை விவசாயிகள் தொடங்கி ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக கார், கோடை, பிசானம் ஆகிய மும்முறை நெல் நடவு செய்யும் பணிகள் நெல்லையில் இருந்து வரும் நிலையில், அதிக உற்பத்தி கிடைக்கும் பருவமாக பிசான பருவமே இருந்து வருகிறது. தற்போது மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் தொழி அடித்தல், நாற்று நடுதல் ஆகிய பணிகை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி ஆகிய இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டிய நிலையில் அதில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
- மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
நெல்லை:
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகள்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதி முறைகள் ஆகியவற்றை பின்பற்றி நெல்லை, தென்காசி மாவட்ட காவல்துறையினர் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி நெல்லை புறநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 27 வழக்குகளும், மாநகரப்பகுதியில் 20 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்கு 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 41 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 200 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன்.
+2
- நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது.
- 3 நாட்கள் காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கல்யாணம்
15 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த 9-ந் தேதி, கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
திருவிழாவின் 15-ம் நாளான நேற்று காலை பூமாலையால் சுவாமி பல்லக்கை இணைத்து அம்பாள் பல்லக்கு செல்லும் அபூர்வ காட்சி நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாளுக்கு பொற்றாமரை குளத்தில் தீா்த்தவாாி நடைபெற்றது.
மறுவீடு பட்டினப்பிரவேச நிகழ்ச்சி
இரவில் சுவாமி நெல்லை யப்பர் அன்னை காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாள் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு எழுந்தருளும் மறுவீடு பட்டினப்பிரவேச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.
அம்பாள் சன்னதியில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் குடவருவாயில் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து நான்கு ரத வீதியில் சுவாமி, அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதியில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு மறுவீட்டு பலகாரங்கள் சீர் பரத்தல் செய்யப்பட்டு நலுங்கு இட்டு மாலை மாற்றி சோடச உபசரனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி, அம்பாள் அனவரததானநாத மண்டபத்தில் சேர்க்கை யுடன் இந்த வருட ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.






