search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை மகாராஜநகரில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
    X

    கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பேசிய காட்சி.

    பாளை மகாராஜநகரில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

    • கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • பாக முகவர்கள் கூட்டத்தை வருகிற 22-ந் தேதிக்குள் முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளை மகாராஜாநகரில் உள்ள கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். ராதாபுரம் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ், அம்பை தொகுதி பொறுப்பாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்துகொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதற்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கியதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல், நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வரும் நிர்வாகிகளுக்கு பாராட்டு, பாராளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 40 தொகுதிகளையும் வென்று இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைப்பது, பாக முகவர்கள் கூட்டத்தை வருகிற 22-ந் தேதிக்குள் முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பொருளாளர் ஜார்ஜ் கோஷல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், வக்கீல் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் தமயந்தி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், போர்வெல் கணேசன், சுடலை கண்ணு, ஜோசப் பெல்சி, நகர செயலாளர் பிரபாகர பாண்டியன், பேரூர் செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×